| 148 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
என்று பரணரும், வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து (அகம் 127 : 3-5) என்று மாமூலனாரும், அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து. என்று 2 ஆம் பத்துப் பதிகமும் கூறுவது காண்க. இவனைச் சிலப்பதிகாரம், கடற்கடம் பெறிந்த காவலன்வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன்வாழி (சிலம்பு 23 : 81-82) என்றும், மாநீர் வேலிக் கடம்பெறிந் திமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவன் (சிலம்பு 25 : 1-2) என்றும் கூறுகிறது. 3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை வென்றுச் சிறைப்பிடித்து அவர்கள் தலையில் நெய்யை யூற்றிக் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து வயிரம் முதலிய பெருஞ்செல்வங்களைப் பெற்றுக்கொண்டான் என்று 2ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்த்தலை பெய்து கைபிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறு கிறார்: ‘இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது யவனரைப் போருள் அகப்படுத்தியென்றவாறு. நெய்த்தலைப் பெய்து கைபிற் கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து |