| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 149 |
கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த யவனரைப் பின்தண்ட மாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண் டென்றவாறு.’ நெடுஞ்சேரலாதன் யவனரை வென்ற செய்தி பதிகத்தில் மட்டுங் கூறப்படுகிறபடியால், குமட்டூர்க் கண்ணனார் இவன்மீது 2ஆம் பத்துப் பாடிய பிறகு, அந்த யவனப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதலாம். இவன் யவனருடன் போர் செய்தது கிரேக்க நாட்டுக்கோ அல்லது உரோமாபுரிக்கோ சென்று போர் செய்தான் என்று கருதக்கூடாது. தக்காணத்து மேற்குக் கரைப் பக்கமாகச் சில ஊர்களை யரசாண்டிருந்த யவன அரசர்களுடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்தான் என்பதே சரித்திர உண்மையாகும். இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் வந்த சாகர்கள் பையப்பையத் தெற்கே மேற்குக்கரைப் பக்கமாக வந்து, சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசர்களுக்குரியதாக இருந்த தக்காண தேசத்தின் மேற்குக்கரைப் பகுதிகளையும் மாளவம் முதலிய இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். அது காரணமாகச் சதகர்ணிய அரசர்களுக்கும் சாக அரசர் களுக்கும் நெடுங்காலம் போர் நடந்தது. அப்போரில் சில சமயம் சதகர்ணிகளும் சில சமயம் சாக அரசர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போர் தொடர்ந்து நெடுங்காலம் நடந்தது. இந்தப் போர்களில் சேரமன்னர் சதகர்ணிகளுடன் நட்பாக இருந்து அவர்களுடன் சேர்ந்து சாக அரசர்களுடன் போர் செய்தார்கள். சாக அரசர் யவனர் (கிரேக்கர்) அல்லர். ஆனாலும், அவர்களுக்கு யவனர் என்னும் பெயர் வழங்கிவந்தது. அவர்கள் விந்தியமலைப் பிரதேசத்தில் அரசாண்டனர். நெடுஞ்சேரலாதன் யவனரை வென்று சிறைப் பிடித்தான் என்பது, இந்தச் சாக யவனரைத்தான். சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) சார்பாக நெடுஞ்சேரலாதன் சாக யவனருடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்ததை இச்செய்தி கூறுகிறது. சாக யவனர் விந்தியமலைப் பிரதேசத்தில் கி.பி. முதலாவது இரண்டாவது நூற்றாண்டுகளில் அரசாண்டார்கள் என்று இந்திய சரித்திரங் கூறுகிறது. அந்தச் சாகர்கள் தக்காண இராச்சியத்தை யரசாண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) உடன் அடிக்கடி போர் செய்துகொண்டிருந்தார்கள். சேர மன்னர்கள் சதகர்ணியரசருக்கு நண்பர்களாகையால், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நூற்றுவர் கன்னர் சார்பாகச் சாக அரசர்களுடன் விந்தியப் பிரதேசத்தில் போர் |