| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 155 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் உம்பற்காட்டையும் கொங்கு நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றிச் சேர இராச்சித்தோடு சேர்த்து இராச்சியத்தை விரிவுபடுத்தினார்கள். வேறு சிறிய தந்தை (செல்வக்கடுங்கோ வாழியாதன்) சேரன் செங்குட்டுவனுக்கு அந்துவன் பொறையன் என்னும் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்ததை முன்னமே கூறினோம். அந்தப் பாட்டனுக்குச் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று ஒரு மகன் இருந்தான். எனவே, அவனும் செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தை முறையினன் ஆவான். மேலும் செல்வக்கடுங்கோ, செங்குட்டுவ னுடைய மாற்றாந்தாயாகிய (தன் தந்தையின் மூத்த மனைவியாகிய) வேளாவிக்கோமான் பதுமன் தேவி என்பவளின் தங்கையை மணஞ்செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்பது பெயர். இச்செய்தியை எட்டாம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம். செல்வக்கடுங்கோவை 7-ஆம் பத்துப் பாடியவர் கபிலர். பாரி வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கபிலர், அவன் இறந்த பிறகு இச் சேரனிடம் வந்து இவனைப் பாடினார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பல போர்க்களங்களைக் கண்டவன். போர்க்களத்தில் பல புண்பட்ட இவனுடைய மார்பு, இறைச்சியைக் கொத்தும் (ஊனம்) மரக்குறடுபோல வடுக்கள் உள்ளதாக இருந்தது. அந்த வடுக்களை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான். எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன் (7-ஆம் பத்து 7 : 17-18) (ஊனம் - இறைச்சியைக் கொத்துவதற்கு உள்ள மரக்குறடு; சான்றோர் - (இங்கு) வீரர்.) இவன் பல போர்களைச் செய்து நாடுகளைக் கைப்பற்றினான்; களவேள்வி செய்தான். |