பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்167

பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேரியாற் றுக் கரை போகிய
செங்குட்டுவன்

(சிலம்பு. 30, கட்டுரை: 12-14)

என்று செங்குட்டுவன் செய்த கடற்போர்ச் செய்தி சிலப்பதி காரத்தில் கூறப்படுகிறது.

செங்குட்டுவனின் கடற் போரைப் பரணர் ஒரு செய்யுளில் உயர்வு நவிற்சியாக நயம்படக் கூறுகிறார். நிலத்திலே போர் செய்வதற்குப் பகையரசர் கிடைக்காத படியாலே செங்குட்டுவன் கடலில் சென்று போர் செய்தான் என்று அவர் கூறுகிறார்.

படைநிலா விலங்கும் கடல்மருள் தானை
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவம் நீங்கவோட்டிய
நீர் மாண் எஃகம்

(அகம். 212 : 15-20)

என்று அவர் கூறுகிறார்.

செங்குட்டுவனுடைய கடற்போர் அவனுக்குப் பெரும்புகழை உண்டாக்கிற்று,

கடம் பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்

(சிலம்பு. 29, ஊசல்வரி)

என்றும்,

பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேரியாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்

(சிலம்பு. 30, கட்டுரை, 12-14)

என்றும்,

நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ

(5ஆம் பத்து. 8 : 3-4)