| 186 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
கங்கையாற்றில் தோணிப்பாலம் அமைக்கும்படி செங்குட்டு வன் சதகர்ணியரசனுக்குக் கூறும்படி சஞ்சயனைத் தூது அனுப்பினான் (சிலம்பு: கால்கோள். 163 - 166). சாரணர்கள் (ஒற்றர்) பலர் இருந்தனர். அவர்கள் சட்டை யணிந்திருந்தனர். அவர்களின் தலைவன் நீலன், போரில் சிறைப் பிடிக்கப்பட்ட கனக விசயரைச் சோழனிடத்திலும் பாண்டிய னிடத்திலும் சென்று காட்டிவரும் படி செங்குட்டுவன், நீலன் தலைமையில் ஒற்றர்களை யனுப்பினான். (சிலம்பு - நீர்ப்படை: 187 - 191). அவன் அவர்களை அழைத்துப்போய்க் காட்ட, அவர்களைக் கண்ட சோழனும் பாண்டியனும் சொன்ன செய்தியை நீலன் வந்து செங்குட்டுவனுக்குக் கூறினான் (சிலம்பு. நடுகல். 80 - 109) செங்குட்டுவன் அவையில் ‘பெருங்கணி’ என்னும் நிமித்திகன் இருந்தான். செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையிலும் இவன் உடன் சென்றிருந்தான். இவன் முழுத்தம் (முகூர்த்தம்) கணித்து அரசனுக்குரிய நல்ல முழுத்தத்தை அவ்வப்போது கூறிக் கொண்டிருந்தான். இவன், ஆறிரு மதியினும் காருக வடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் (சிலம்பு - கால்கோள்: 25 - 26) (ஆறிருமதியினும் - இராசி பன்னிரண்டினும்; ஐந்து கேள்வி - நட்பு ஆட்சி எச்சம் பகை நீசக்கோள்; திதி வாரம் நக்ஷத்திரம் யோகம் கரணமுமாம். அரும்பதவுரை). செங்குட்டுவன் வடநாட்டுக்குப் புறப்படும் நல்ல வேளையைக் கணித்துக் கூறியவன் இவனே. (சிலம்பு- கால்கோள். 27-31) செங்குட்டுவன் வடநாட்டில் வெற்றி பெற்றுக் கண்ணகிக்குக் கல் எடுத்து நீர்ப்படை செய்த பிறகு அவன் பாசறையில் அமர்ந்திருந்த போது இப்பெருங்கணியன், எண்ணான்கு மதியம் வஞ்சிநீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்க (சிலம்பு - நீர்ப்படை: 149-150) |