பக்கம் எண் :

240மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சேரலாதன், வானவரம்பன் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தான் என்றும், அவன் பார்ப்பார்க்குக் கபிலைப் பசுக்களைத் தானங் கொடுத்துக் குடநாட்டிலே ஓரூரையும் பிரமதேயமாகத் தானஞ் செய்தான் என்றும், இவ்வாறு செய்தபடியினாலே அவன் தனக்குள்ள வானவரம்பன் என்னும் பெயரை விளங்கச் செய்தான் என்றும் அது கூறுகின்றது.

பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து
வான வரம்பனெப் பெயரினிது விளக்கி

என்பது 6ஆம் பத்துப் பதிகம்.

பிராமணர்களுக்குத் தான தருமஞ் செய்தபடியினாலே அவன், வானவரம்பன் என்னும் தன் பெயரை விளங்கச் செய்தான் என்று இச்செய்யுள் திட்டமாகக் கூறுகிறது.

இச்செய்யுளில் ‘வானவரம்பன்’ என்றிருக்க வேண்டிய சொல் ‘வானவரம்பன்’ என்று தவறாக இருப்பது காண்க. பிராமணருக்குக் கபிலைப் பசுக்களையும் ஊரையும் தானஞ் செய்ததால் வான வரன்பன் ((பூ) தேவர்களின் அன்பன்) என்றும் பெயர் பொருந்து மல்லாமல், வானத்தை எல்லையாகவுடையன என்னும் பொருளுள்ள வான வரம்பன் என்பது பொருந்தாதன்றோ? எனவே, இச் செய்யுளின் கருத்தையும் பொருளையும் நோக்கும்போது இதில் உள்ள ‘வான வரம்பன்’ என்பது பொருந்தாது என்பதும் ‘வானவரன்பன்’ என்பதே பொருந்தும் என்பதும் தெரிகின்றது. ஆகவே, ‘வானவரம்பன்’ என்பது பிழையான படம் ஆகும். மேலே காட்டிய சான்றினால் கடைச்சங்க காலத்தின் இறுதியிலே, அதாவது கி.பி. முதல் இரண்டாவது நூற்றாண்டு களிலே பிராமணரின் அன்பன் என்னும் பொருளில் வானவரன்பன், இமயவரன்பன் என்னும் பெயர்கள் சேர அரசர்களுக்கு வழங்கப் பட்டதைக் கண்டோம். ஆனால், இச்சொற்கள் இப்பொருளைப் பெறுவதற்கு முன்பு கி.மு. முதலாவது இரண்டாவது நூற்றாண்டு களிலே வேறு பொருளுள்ளனவாக இருந்தன என்றும் கூறினோம். அந்த வேறு பொருள் யாது என்பதைக் காண்போம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழிந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா தேசம் முழுவதையும் அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி `தேவனாம்பிய’ (தேவனாம்பிரிய) என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்