242 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
அவற்றின் உண்மையான பொருள் மறக்கப்பட்டு, பிராமணரின் அன்பன் என்னும் பொருளில் வழங்கப்பட்டன என்று தோன்றுகிறது. இதற்குச் சான்று, மேலே காட்டப்பட்டது. அதாவது “பார்ப்பார்க்குக் கபிலையொடு குட நாட்டு ஓரூர் ஈத்து, வானவரம்பன் எனப் பெயரினிது விளக்கி” என்னும் பதிக (6ஆம் பத்து) அடிகளினால் விளங்குகின்றது. பிற்காலத்தில் இச்சொற்கள் ஏடெழுதுவோரின் கைப்பிழை யால் வானவரம்பன், இமயவரம்வன் என்று தவறாக எழுதப்பட்டு, அதற்கு வானத்தை எல்லையாகவுடையவன் இமயமலையை எல்லையாக வுடையவன் என்று பொருள் கூறப்பட்டது. சேர அரசர் ‘இமயவரம்பன்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக் கொண்டதை அறிந்தோம். திரு. P.T. சீனிவாச ஐயங்கார், புலவர்கள் ‘இமயவரம்பன்’ (இமயமலையை எல்லையாகவுடைய வன்) என்று கற்பித்துத் தாங்களாகவே நெடுஞ்சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இப்பெயரைச் சூட்டினார்கள் என்று புலவர்களின் மேல் பழிபோடுகிறார். (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p. 503.) இது சிறிதும் பொருந்தாது. இப் பெயர்கள் புலவர்களால் தங்கள் விருப்பப்படி சூட்டியவையல்ல. சேர அரசர்களே தங்களுக்குப் பரம்பரைப் பெயராகச் சூட்டிக் கொண்ட பெயர்கள் என்பதை மேலே விளக்கினோம். இரு பெருங் காவியங்கள் சேரன் செங்குட்டுவனின் இறுதிக் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் கடைசியில்) சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு சிறந்த காவியங்கள் முறையே இளங்கோ அடிகளாலும் மதுரைக் கூலவாணிகன் சாத்தனாராலும் இயற்றப் பட்டன. சிலப்பதி காரம் இயற்றிய இளங்கோ அடிகள், சேரன் செங்குட்டுவனுடைய தம்பியார். சமண சமயத்தை மேற்கொண்டு துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் துறவிகளுடன் வசித்து வந்தார். மணிமேகலைக் காவியத்தை இயற்றிய கூலவாணிகன் சாத்தனார் மதுரையில் தானிய வாணிகம் செய்தவர். இவர் இளங்கோ அடிகளுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் நண்பர். அக்காலத்தில் தமிழில் அகப்பொருள், புறப்பொருள் பற்றிய தனிச் செய்யுட்களும் பரிபாடல் முதலிய இசைத் தமிழ் நூல்களும் இருந்தன. தமிழ்நாட்டுக்கே உரிய காவிய நூல்கள் அக்காலத்தில் தமிழில் இல்லை. பாரதம், இராமாயணம் போன்ற |