பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 249 |
கோவலனை அநியாயமாகக் கொன்ற காரணத்துக்காக மதுரை மக்கள் சீற்றங்கொண்டு அரசனுடைய அரண்மனையைக் கொளுத்தி னார்கள் என்பதே உண்மை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உள்ளது உள்ள படியே கூறாமல் கற்பனைகளைப் புனைந்து வியப்புச் சுவை புலப்படும் படி எழுதுகிறார் இளங்கோ அடிகள். நகர் என்பதற்கு அரண்மனை என்றும் நகரம் என்றும் இரண்டு பொருள் உண்டாகையால் அவ்விரு பொருள்படும்படி இக் காவியத்தில் கூறுகிறார். அத்துடன் நிற்காமல், அக்கினிக் கடவுளே நேரில் வந்து கண்ணகியிடத்தில் ‘எந்தெந்த இடங்களை எரிக்க வேண்டும்’ என்று கேட்டதாகவும் இந்திந்த இடங்களை எரிக்க வேண்டும் என்று கண்ணகி கூறியதாகவும் கற்பிக்கிறார். உணர்ச்சி மிகுதியினால் ஆவேசங்கொண்ட நகர மக்கள் அரண்மனைக்குத் தீவைத்ததைக் கூறாமல், கண்ணகியார் தம் நகிலைப் பிய்த்து எறிந்து நகரத்தைத் தீயிட்டு எரித்ததாகவும் கற்பிக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடக்கும் சிறப்பையும் அவ்விழாக் காலத்தில் மாதவி அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்திப் பதினோராடல்களை ஆடும் சிறப்பைக் கூற புகுந்தவர், விழாவையும், ஆடல்களையும் பார்ப்பதற்காக இமய மலைக்கு அப்பால் உள்ள வடசேடியிலிருந்து விஞ்சையன் ஒருவன் தன் மனைவியுடன் ஆகாய வழியே பறந்து வந்து இக்காட்சிகளைக் கண்டான் என்றும் புனைந்து கற்பிக்கிறார். இறந்து கிடந்த கோவலனைக் கண்ணகியார் தழுவிப் புலம்பி யழுதபோது கோவலன் உயிர்பெற்று அவர் கண்ணீரைத் துடைத்து ‘இங்கே இரு’ என்று கூறி விண்ணுலகம் போனான் என்றும்புனைந்து கற்பிக்கிறார். இதுபோன்று பல செய்திகளைக் கற்பனையாகக் கூறுகிறார். காவிய நூல் அழகும் சிறப்பும் பெறவேண்டுமானால் இத்தகைய புனைந்துரைகளும் கற்பனைகளும் மெய்ப்பாட்டுச் சுவைகளும் இடம்பெற வேண்டும் என்பது கவிமரபு. இந்த மரபுப் படியே இளங்கோ அடிகள் இடத்துக்கேற்றபடி கற்பனைகளைப் புனைந்து கற்பித்திருக் கிறார். இக்கற்பனைகளுக்கும் உண்மையான நிகழ்ச்சிகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதனை அறியும் அறிவில்லாதவர், காவியப் புலவனின் கற்பனைகளையும் உண்மை நிகழ்ச்சி என்று |