பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 253 |
மணிமேகலையும் சுதமதியும் உவவனத் தோட்டத்தில் இதுபற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது அவ்விடம் வாசந்தவை என்னும் மூதாட்டி வந்தார். அவர் நகர மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவர் மணிமேகலைத் தெய்வத்தின் அருள்பெற்றவர் என்று அவரை எல்லோரும் மதித்து அஞ்சிப் போற்றினர். வந்த அவ்வம்மையார் புத்த பாத பீடிகையை வணங்கிய பிறகு இவர்களை நோக்கி இங்கு ஏன் தனியே நிற்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் நடந்த செய்தியைச் சொல்லி, வெளியே போனால், உதயகுமாரன் காத்திருந்து என்ன செய்வானோ என்று அஞ்சுகிறோம் என்று கூறினார்கள். அப்படியானால், தெருவழியே நீங்கள் போகவேண்டாம். இத்தோட்டத்தின் மேற்கேயுள்ள மதில் சுவர் பக்கமாகச் சென்றால் அங்கு ஒரு சிறு வாயில் உண்டு. அதனுள் நுழைந்து போனால் சக்கரவாளக் கோட்டம் உண்டு. அந்த வழியாகப் போய்ச் சேருங்கள் என்று கூறினாள். இதற்குள் இருள் வந்து விட்டது. ஆனால், நிலா வெளிச்சம் பால்போல் காய்ந்தது,. சுதமதி மூதாட்டியைக் கேட்டாள், ஊரார் சுடுகாட்டுக் கோட்டம் என்று கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் சக்கரவாளக் கோட்டம் என்று கூறுகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று. ‘சரி, உட்காருங்கள் சொல்லுகிறேன்’ என்று அம்மையார் மணலில் அமர்ந்தார். மணி மேகலையும் சுதமதியும் அருகில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். வாசந்தவை அம்மையார் சக்கரவாளக் கோட்டத்தைப் பற்றி நீண்டதோர் கதை கூறினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அப்பூஞ் சோலைக் காற்றிலே நிலாவெளிச்சத்திலே உறங்கிவிட்டார்கள். நள்ளிரவில் சுதமதியை வாசந்தவை மூதாட்டி எழுப்பினார். கண்விழித்துப் பார்த்தபோது நள்ளிருளும் நிலாவெளிச்சமுமாக இருந்தது. அருகில் மணிமேகலை காணப்படவில்லை. அப்போது வாசந்தவை அம்மையார் சொன்னார்: ‘மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தின் கட்டளைப்படி மணிபல்லவஞ் சென்றிருக்கிறாள்; ஏழு நாள் கழித்து அவள் திரும்பி வருவாள்; இச்செய்தியை அவள் தாயான மாதவிக்குச் சொல். மணிமேகலை பழம் பிறப்புக்களை அறிந்து கொண்டு சுகமாகத் திரும்பி வருவாள். நீ இப்போது நான் முன்பு கூறிய வழியே சக்கரவாளக் கோட்டம் போ. அங்கு உலகவறவியில் |