254 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பெரியோர் பலர் இருக்கிறார்கள்; அங்குத் தங்கி விடிந்த பிறகு மாதவியிடம் போய் இச்செய்திகளைச் சொல்லு! நீ அஞ்சாதே, போ’ என்று கூறினார். நம்பிக்கையுள்ள மூதாட்டி யார் கூறியபடியே சுதமதி தோட்டத்தின் மேற்குச் சுவரிலிருந்த வாயிலில் நுழைந்து சக்கரவாளக் கோட்டத்து உலகறவிக்குப் போனாள். சுதமதியை அனுப்பிய பிறகு வாசந்தவையார் நேரே சோழ னுடைய அரண்மனைக்குச் சென்றார். அவர், அரண்மனையில் அரச குடும்பத்தாருக்கும் அரண்மனைச் சேவகருக்கும் நன்கு பழக்கம் உள்ளவர் ஆகையால், அந்நள்ளிரவில் யாதொரு தடையு மில்லாமல் உள்ளே நுழைந்தார். அரசகுமாரனான உதயகுமாரன் ஆசனத்தில் அமர்ந்து தூக்கமில்லாமல் இருந்தான். விளக்குகள் மங்கலாக எரிந்துகொண்டிருந்தன. வாசந்தவை அம்மையாரைக் கண்டவுடன் அவன் திடுக்கிட்டு எழுந்து வணங்கினான். அம்மையார், அவன் மாதவி மகள் மணிமேகலைமேல் கொண்டுள்ள எண்ணத்தை விட்டுவிடும்படியும் அரசகுமரனாகிய அவனுக்கு அச்செயல் தகாதது என்றும் அவனுடைய அரச குலத்துக்கு ஏற்ற படி உயர்ந்த ஒழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது மணிமேகலா தெய்வத்தின் கட்டளை என்று கூறிப் போய்விட்டார். பொழுது விடிந்த பிறகு உலகவறவியில் இருந்த சுதமதி மாதவியிடஞ் சென்றாள். மணிமேகலையும் சுதமதியும் உவவனத் திலிருந்து திரும்பி வராதபடியால் மனங் கலங்கிக் கவலை யோடிருந்த மாதவியிடத்தில், பூந்தோட்டத்தில் நேர்ந்தவைகளைச் சொல்லி, வாசந்தவையம்மையார், மணிமேகலையைப் பற்றிக் கூறிய செய்திகளையும் தெரிவித்தாள். மணிமேகலையின் பிரிவு அவளுக்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. ஆயினும் அவள் ஒருவாறு மனந்தேறி னாள். வாசந்தவையார் நகர மக்களுக்கெல்லாம் தாய் போன்ற நல்லவர் ஆகையால் அவர் சம்பந்தப்பட்டுள்ள இச் செயலில் நன்மையைத் தவிர தீமை நேரிடாது என்னும் உறுதி யான நம்பிக்கை மாதவியின் துயரத்தைப் போக்கியது. மணிபல்லவத்திற்குக் கப்பலில் பௌத்தப் பிக்குணிகளால் அழைத்துப் போகப்பட்ட மணிமேகலை அங்கிருந்த புத்த பீடிகையைக் கண்டு வணங்கினாள். பௌத்த மதத்தில் முன்னையதை விடத் திடமான நம்பிக்கையும் உறுதியுங்கொண்டாள். அங்குக் |