பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 261 |
பறந்து போனார்கள் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், மறுபிறப்பைப் பற்றிப் பௌத்தர்களும் சமணர்களும் அதிக ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள். அவர்களின் சமய நூல்களில் மறுபிறப்புக் கதைகளை அதிகமாகக் காணலாம். ஆகவே, சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் நூல்களில் மறுபிறப்பைப் பற்றி அதிகமாகக் கூறியுள்ளனர். மணிமேகலைக் காவியத்தின் தலைவியாகிய மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தின் வரம் பெற்று ஆகாய வழியே பறந்து சென்றாள் என்றும் விரும்பியபடி எல்லாம் உருவத்தை மாற்றிக் கொண் டாள் என்றும் கற்பித்திருக்கிறார். அமுதசுரபி பாத்திரம், எடுக்க எடுக்கக் குறையாமல் உணவைத் தானாகவே சுரந்து கொண்டிருந்தது என்றும், தூண்களில் இருந்த பாவைகள் பேசின என்றும், மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தினால் அழிந்தது என்றும் பல கற்பனைகள் இக் காவியத்தில் இடம் பெற்றுள்ளன. காவிய நூலுக்குக் கற்பனைகள் அவசியம் தேவை. கற்பனைகளும் உவமைகளும் இல்லாத காவியம் சுவைபடாது. வியப்புச் சுவைக்காகக் கற்பனைகள் காவிய நூல்களுக்குத் தேவை. ஆகவே, காவிய நூல்களை இயற்றின சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் காவியங்களில் கற்பனைகளைப் புகுத்தியுள்ளனர். சரித்திர ஆராய்ச்சிக்காரர் கற்பனையை ஒதுக்கிவிட்டுச் சரித்திர நிகழ்ச்சிகளை மட்டும் கொள்ள வேண்டும். அமாநுஷிகமான நம்பத்தகாதவை என்று அடியோடு ஒதுக்கித் தள்ளுவது கூடாது. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில், அவருடைய உறவினரான மகேந்திரர் பௌத்த மதத்தை இலங்கையில் பிரசாரஞ் செய்வதற் காக அனுப்பப்பட்டார். அவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தை நிறுவினார். வடஇந்தியாவிலிருந்து மகேந்திரர் இலங்கைக்குச் சென்றது கடலில் கப்பல் வழியாகத்தான். ஆனால், இந்தச் செய்தியைக் கூறுகிற மகாவம்சம் என்னும் பௌத்த மத நூல், மகேந்திரர் ஆகாய வழியாகப் பறந்து இலங்கைக்கு வந்தார் என்று கூறுகிறது. ‘இது அமானுஷிகச் செயல்; இதை ஒப்புக்கொள்ள முடியாது. மகேந்திரர் என்று ஒரு ஆள் இருந்தது `பொய்’ என்று சரித்திரக்காரர் யாவரும் இவரை ஒதுக்கிவிட வில்லை. மகேந்திரர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்பினார் என்றுதான் சரித்திரம் எழுதி யிருக்கிறார்கள். சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் பி.டி. சீனிவாச ஐயங்காரும் வையாபுரிப் பிள்ளையும் போன்ற சரித்திர |