262 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
ஆசிரியரும் ஆராய்ச்சிக்காரரும் இதைச் சரித்திர உண்மை என்று தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களே தமிழ் நூல்களை ஆராயும்போது, கற்பனைகளை நீக்கி வரலாற்றை மட்டுங் கொள்ளாமல் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கட்டுக்கதைகள் என்று கூறுகிறார்கள். பாரத, இராமாயணக் கதைகளைக் கட்டுக்கதை என்று ஒதுக்காமல் சரித்திரங்கள் என்று கொள்ளுகிற இந்த அறிஞர்கள், இந்தத் தமிழ் நூல்களை மட்டும் கட்டுக்கதைகள் என்று ஒதுக்கி யிருக்கிறார்கள். ஏன் மற்ற நூல் களுக்கு ஒரு நீதியும் தமிழ் நூல்களுக்கு ஒரு அநீதியும் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சரித்திரக் காரர்களுக்கும் ஆராய்ச்சிக்காரருக்கும் துவேஷபுத்தியும் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும், அவற்றிலுள்ள கற்பனைகளைக் களைந்துவிட்டால், அவற்றில் கூறப்படும் நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே என்பது விளங்கும். சங்க காலத்துச் சமுதாய நிலை, அக்காலத்துப் பழக்க வழக்கங்கள், அரசியல் நிலை, கலை பண்பாடு முதலியவைகளை ஆராய்வதற்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் பெருந்துணையாக இருக்கின்றன. கற்பனைகளையும் உவமைகளையும் களைந்து சரித்திர நிகழ்ச்சிகளை மற்றச் சான்று களோடு ஒத்திட்டுப் பார்த்து, ஏற்கத்தக்கவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்டுக்கதை என்று அடியோடு ஒதுக்குவது கூடாது. மற்றக் காவிய நூல் களிலுள்ள சரித்திரங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கி றோமோ அவ்வாறே இந்தக் காவியங்களையும் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாத்தனார் காலம் மணிமேகலை காவியத்தில் அதிக வடசொற்கள் ஆளப் பட்டிருப்பதைக் கொண்டு அந்நூலை இயற்றிய சாத்தனார் சங்க காலத்தில் இருந்தவர் அல்லர் என்றும் அவர் மிகப் பிற்காலத்தில் இருந்தவர் என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள். திரு. சிவராச பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, மு. இராகவையங்கார், பி.டி. சீநிவாச ஐயங்கார் போன்றவர்கள் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். சரியானபடி விஷயத்தை உணர்ந்துகொள்ளாமலே வெறும் சொல்லை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முற்காலம், பிற்காலம் என்று வரை யறுப்பது சரியான ஆராய்ச்சி ஆகாது. (சொல் ஆராய்ச்சி ஓரளவுதான் |