பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 267 |
கடைச்சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடி வடைகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அசோகச் சக்கர வர்த்தி காலமாகிய கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கடைச் சங்க இறுதிக் காலமாகிய கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில், அதாவது ஏறத்தாழ 500 ஆண்டுக்காலம், சங்ககாலத் தமிழகத்தில் பௌத்த, ஜைன மதங்கள் வாழ்ந்திருக்கின்றன. அந்த 500 ஆண்டு களாக அந்த மதத்தவர் தங்கள் மதக் கொள்கைகளை மக்களுக்குப் போதித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுக் காலம் அவர்கள் வாளா இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், பௌத்தப் பிக்குகளும் சமணத் துறவிகளும் தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை நாடெங்கும் பரவச் செய்வதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தவர்கள். அதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் மதக் கொள்கைகளைச் சங்க காலத் தமிழகத்தில் பிரசாரஞ் செய்து கொண்டுதான் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. வையாபுரியார் கருதுவதுபோல, அல்லது அவர் நம்மைக் கருதச் செய்வதுபோல, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த பௌத்த சமணர்கள் `சங்க காலம் போகட்டும், பிறமொழிக் கலப்புக் காலம் வரட்டும்’ என்று வாளா இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வந்த காலம் முதற்கொண்டே தங்கள் மதப் பிரச்சார வேலையைத் தொடங்கினார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. அவ்வாறு மதப் பிரசாரம் செய்யப்பட்டபோது அவர்களுடைய தெய்வ பாஷையாகிய பாலி மொழியும் அர்த்தமாகதி மொழியும் சங்ககாலத் தமிழிலும் கலக்கத்தானே செய்திருக்கும்? பாலிமொழியிலே பௌத்த மதநூல்களும் அர்த்தமாகதி (சூரசேனி) மொழியிலே ஜைன சமய நூல்களும் எழுதப்பட்டிருந்தபடியினாலே, அந்த மொழி நூல்களை ஆதாரமாகக் கொண்டு மத போதனை செய்தபோது, அம்மொழி, நாட்டு மொழியில் கலக்கத்தானே செய்யும்? அதைத் தடுக்க முடியுமா? தமிழ்மொழி இன்றுள்ளதுபோலவே அன்றும் பேச்சு வழக்கில் இருந்த மொழி. பேச்சு வழக்கில் இருக்கும் மொழிகள், மதங்களின் தொடர்பினாலோ வாணிகத் தொடர்பினாலோ, பிற மொழியினருடன் பழகும்போது பிற மொழிச் சொற்கள், பேச்சு மொழியில் கலந்துவிடுவது இயற்கை. இந்த இயற்கையைத் தடுக்க முடியாது. ஆனால், கட்டுப் பாட்டுக்கு அடங்கி வரம்பு மீறாதபடி பார்த்துக் கொள்வது மொழிப் பற்றுள்ளவரின் கடமை. அதை அக்காலத்துத் தமிழர் செய்திருக் |