| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 281 |
இச்செய்தியை இச்செய்யுளில் வருகிற, “நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின், வெண்டலைப்புணரிக் குடகடற் குளிக்கும், யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந” என்னும் அடிகளினால் அறியலாம். சேரலாதன் சோழநாட்டைப் பிடித்துக் கொண்டு பேரரசனாக இருப்பது பாண்டியருக்கு ஆபத்தாக இருந்தது. சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதுபோல, சேரன் பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக் கொள்வான் அல்லவா? அந்த நிலை ஏற்படாதபடி பாண்டிய அரசர், சேரலாதனை எதிர்த்தார்கள். பாண்டியர் ஐவரும் ஒன்றுசேர்ந்து தமது படைத்தலைவர்களை ஏவி, உதியன் சேரலாதனுடைய நாடுகளைக் கவர்ந்து கொண்டார்கள். பாண்டியரின் ஏவலினால் தனது நாடுகளில் சிலவற்றைப் பிடித்துக் கொண்ட பாண்டியரின் படைத்தலைவர் மீது உதியன் சேரலாதன் படையெடுத்துச் சென்று அவர்களுடன் போர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே அவன் போருக்குப் புறப்பட்டான். புறப்படுமுன் தன் வீரர்களுக்குப் “பெருஞ்சோறு” அளித்தான். இதுதான் இச்செய்யுளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் சரித்திரச் செய்தி. எனவே, “அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்கு நேரான பொருள், “அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியருடன் சினந்து, நிலத்தை தம்மிடத்தே கொண்ட பொற் பூந்தும்பையையுடைய பாண்டியரின் சேனைத் தலைவர் நூற்றுவரும் (அல்லது பதினெண்மரும்) பொருது போர்க்களத்தின்கட் படுமாறு நினது சேனைக்குப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கினாய்” என்பதாகும். இவ்வுரையே இச் செய்யுளின் செம்பொருள் எனத்தோன்று கிறது. இது சங்ககாலத் தமிழரின் போர் முறைக்கும் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கும் பொருந்துவதாகும். இதனை விட்டுப் பாண்டவர் கௌரவரின், பாரதப் போருடன் இணைப்பது பெருந் தவறாகும். பழைய உரையாசிரியர் செய்த இந்தத் தவறு, பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும், அவனைப்பாடிய முரஞ்சியூர் முடிநாகராயரும் |