284 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
தேவநேயர் அவர்களின் கருத்துக்களுக்கு விடை கூறும்போது, “பொழிலில்” போதிய இடம் இருக்குமா என்கிற ஐயத்தின் காரணமாக, கூடியவரையில் சுருக்கமாகவே எழுதுகிறேன். புறம் 2-ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம் பதின்மர் என்னும் சொற்கள் பாண்டவரையும் கௌரவரையுந் தான் சுட்டுகின்றன என்றும், அவ் விருவரும் செய்த பாரதப் போரில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்தான் என்றும், இதுவே உண்மைச் செய்தி என்றும் பாவாணர் வற்புறுத்துகிறார். இதுவே இக்கட்டுரையின் முதன்மையான கருத்து. இதற்கு விடை கூறுவதற்குமுன், பாவாணர் அவர்கள் கூறியுள்ள வேறுசில கருத்துக்களை ஆராயவேண்டியிருக்கிறது. அவற்றை ஆராய்ந்த பிறகு, மூலக்கருத்தைப்பற்றி ஆராய்வோம். 1. “தொல்காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறையாகக் குறிக்கப் பட்டுள்ள ‘பிண்டமேய பெருஞ்சோற்றுநிலை’, வழி வழி வந்த மூவேந் தர்க்கும் பொதுநிலையன்றி அவருள் ஒருவனுக்குமட்டும் சிறப்பாக உரியதன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும். இயன்மொழி வாழ்த்தில், அவனுக்குச் சிறப்பாக உரிய இயல்களையும் செயல் களையும் குறிப்பிடுவதன்றி, எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று” என்று தேவநேயப் பாவாணர் எழுதுகிறார். இது தவறான கருத்து என்பதைக் கீழ்வரும் சான்றுகள் தெளிவாக்குகின்றன. பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவானதென்றாலும்; அதுவும் ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்குச் சான்றுகள் இவை. பெருஞ்சுமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோறு உகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்தே நின் கழங்கு குரன் முரசே என்பது பதிற்றுப்பத்து. (3- ஆம் பத்து 30-ஆம் செய்யுள்) பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌ தமனார் பாடியது. பெருஞ்சோறு பயந்த திருந்து வெற் றடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் |