பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்287

வான வரம்பனை நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட போலம் பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

இது புறநானூறு 2-ஆம் செய்யுள்.

ஓரைவர் ஈரைம் பதின்ம ருடன் றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்
கார்செய் குழலாட வாடாமோ வூசல்
கடம் பெறிந்த வாபாடி! யாடாமோ வூசல்!!

இச்செய்யுள் சிலம்பு. வாழ்த்துக் காதை, ஊசல் வரியில் உள்ளது.

பாண்டவருடன் கௌரவர் செய்த பாரதப் போரில் இருதரத்துப் படையினருக்கும் உதியன் சேரலாதன் என்னும் சேரன் பெருஞ்சோறு அளித்தான் என்று இச் செய்யுள்களுக்குப் பொருள் கொள்ளப்படுகிறது. புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் இவ்வாறு தெளிவாக உரை எழுதியுள்ளார். பொதுவாகப் படித்தவரும் படியாதவரும் பாண்டவர் ஐவர் கௌரவர் நூற்றுவர் என்று அறிந்திருப்பதனாலே, இச் செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம்பதின்மர் என்பன பாண்டவர் கௌரவர் என்றும் அவர்கள் செய்த பாரதப் போரில் உதியன் சேரலாதன் போர்வீரர்களுக்குச் சோறு கொடுத்தான் என்றும் கருதுவது இயல்பே. பாண்டவரைத் தவிர வேறு ஐவர் இலரோ என்றும், கௌரவரைத் தவிர வேறு நூற்றுவர் இலரோஎன்றும் சிந்திக்கமாட்டார். மறை (வேதம்) என்பது சில இருந்தாலும், ஆரிய மறையையே பலரும் கருதுவது போல் வதோர் செய்தியாகும். இது இச்செய்யுளைப்பாடியோர் பாரதப் போர் என்றோ பாண்டவர் கௌரவர் என்றோ ஒருசொல்லைக் கூறி யிருப்பின் ஐயத்திற்கு இடமில்லை. (சாதாரணமாக மக்கள் எல்லோரும் இச்செய்யுள்கள் பாரதப் போரைத்தான் குறிக்கின்றன என்று நம்புவார்கள், நம்புகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சில தடைகள் உள்ளன.

அகநானூற்றில் 233-ஆம் செய்யுளில் மாமூலனார் என்னும் புலவர் உதியன் சேரல் என்னும் சேரன் பெருஞ்சோறு கொடுத்த