பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 289 |
சோறு பயந்த - பாண்டவர்கள் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதனை” என்று எழுதியுள்ளார். அப்படியானால் இவன் பாரதப் போரில் சோறு கொடுத்த உதியன் சேரல் ஆகவேண்டும். இவனிடம் சென்று பெற்ற பிறகு பராசரனும் பாரத காலத்தில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் பரிசுபெற்ற பிறகு சேரர்களை வாயார வாழ்த்துகிறான். அவ்வாறு வாழ்த்தும்போது கடைச் சங்க காலத்தில் இருந்த சேர அரசர்களை வாழ்த்துகிறான். விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி கடற்கடம் பெறிந்த கரிவலன் வாழி. விடர்ச் சீலை பொறித்த வேந்தன் வாழி. பூந்தண் கொருநைப் பொறையன் வாழி. மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென (சிலம்பு. கட்டுரை 80-84) அரும்பத உரையாசிரியர் கூறுவது சரியாயிருக்குமானால், பாரதப் போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற பராசரன், பாரத காலத்துக்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர அரசர்களை எப்படி வாழ்த்தமுடியும்? பராசரன் கடைச் சங்க காலத்தில் இருந்தான் என்றால், “பாண்டவர் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதைக் குறிக்கிறதென்று அரும்பதவுரையாசிரியர் கூறியது தவறாகிறது. பெருஞ்சோறு என்றால் பாரதப் போரில் சேரன் கொடுத்த சோறுதான் என்று கருதிக் கொண்டு உரை எழுதினார் அரும்பத உரையாசிரியர். ஆனால் வரலாற்றுடன் பொருத்திப் பார்க்கும்போது முன்னுக்குப் பின் முரண்படுகிறது. அன்றியும் வேறு சில வினாக்கள் எழுகின்றன. 1. இரண்டு அரசர் போர் செய்தால், ஒருவர் பக்கத்தில் சேர்ந்து போர் செய்யவேண்டுவது முறை, அதனை விட்டு இரண்டு தரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று. 2. ஒருபக்கத்திலும் சேரமுடியாதபடி நெருங்கிய உறவு முறை யுடையவனாக இருந்தபடியால் இருதரத்திலும் சேராமல், இருவருக்கும் சோறு அளித்தான் என்றால், சேரன் பாண்டவர் கௌரவர்களுக்கு எந்த முறையில் உறவினன்? தாயாதி, பங்காளி உறவா? இதற்குச் சான்று ஏதேனும் உண்டா? |