பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 299 |
கடற்கரையை அடுத்து இருந்தது. மருவூர்ப்பாக்கத்தில் மீன்பிடிக்கும் பரதவரும், கொல்லர், கருமார், கன்னார், தச்சர், பொற்கொல்லர், இசைவாணர் முதலான தொழிலாளரும் நடுத்தர மக்களும் வாழ்ந்தனர். பல பொருள்களை விற்கும் கடைவீதிகள் மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையில் இருந்தன. மருவூர்ப் பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பட்டினப்பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் கோட்டை மதில்கள் இருந்தன. மதில்களுக்கு வெளியே அகழி இருந்தது. கோட்டைக்குள் இருந்த பட்டினப்பாக்கத்தில் செல்வரும் பெருங்குடி மக்களும் வாழ்ந்தனர். சோழ அரசருடைய அரண்மனை ஆற்றங்கரைப் பக்கமாகப் பட்டினப்பாக்கத்தில் இருந்தது. காவிரிபூம்பட்டினத்தின் துறைமுகம் உலகப் புகழ் பெற்றிருந்தது. இந்தத் துறைமுகத்திற்குப் பாரத நாட்டின் பல திசைகளிலிருந்தும் கடல் வாணிகர் வந்தனர். யவன வாணிகரும் இங்கு வந்தனர். ‘பெரிபுளூஸ்’8 என்னும் கடற்பயண நூல் இத்துறைமுகத்தைக் ‘கமரா’9 என்று கூறு கிறது. தாலமி என்னும் யவனர் இதனைச் ‘சபரிஸ்’10 என்று கூறுகிறார். காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சங்கப்பாடல்கள் கூறுகின்றன. இங்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களையும், வாணிகத்தையும் பற்றிப் ‘பட்டினப்பாலை’ கூறுகிறது. மணிமேகலை, சிலப்பதிகாரக் காப்பியங்களிலும் இதன் சிறப்புக் கூறப்படுகிறது. கடல் வாணிகர்களும் (மாநாய்கர்), தரை வாணிகர்களும் (மசாத்துவர்) இந் நகரத்தில் வாணிகம் செய்தார்கள். சங்க காலத்தில் காவிரிப்பூம் பட்டினம் தலையாய துறைமுகமாகவும்11 பெரிய வணிக நகரமாகவும் இருந்தது. குடந்தை சோழ நாட்டில் சங்ககாலத்தில் இருந்த ஊர்களில் குடந்தையும் ஒன்று. குடந்தை இக்காலத்தில் கும்பகோணம் என்று வழங்கப்படுகிறது. சோழரின் பெருநிதி இவ்வூரில் சேமித்து வைக்கப்பட்டிருந் தது.12 குடந்தையைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. மதிலைச்
8. Periplus 9. Kamara 10. Chaberis 11. வேங்கடசாமி, மயிலை சீனி., ‘சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்’ (சங்ககாலத்து நகரங்கள்), பக். 126 - 150 12. அகம். 60 : 13 - 14 |