பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 337 |
ஒரே ஊரில் வெவ்வேறு காலங்களில் போர் நடந்திருக்கலாம் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வெண்ணிப்போரில் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டவர் பலர். அவர்களுள் சேர அரசன் ஒருவனும், பாண்டிய அரசன் ஒருவனும் இருந்தனர். அவர்கள் இரண்டுபேருமே அந்தப் போர்க்களத்தில் இறந்து போனார்கள் என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது. பரணரின் அகநானூற்றுப் பாடலும்5 அதையே குறிப்பிடுகிறது. கழாத் தலையாரின் புறநானூறுற்றுப் பாடலும்,6 மாமூலனாரின் அகநானூற்றுப் பாடலும,7 வெண்ணிக் குயத்தியாரின் புறநானூற்றுப் பாடலும்8 அந்தப் போரில் சேர அரசன் இறந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெண்ணிப் போரில் கரிகாலனை எதிர்த்த பகைவர்களும் ஒரே கூட்டத்தாராக உள்ளனர். அப்படியிருக்க வெண்ணியில் வேறு வேறு காலத்தில் நடைபெற்றவை என்று அந்தப் போரைக் கொள்ள முடியவில்லை. எனவே, சங்கககாலத்து வெண்ணிப் போர் ஒன்றுதான்; நிகழ்ந்த காலமும் ஒன்றுதான்; இந்தப் போரில் ஈடுபட்ட கரிகாலனும் ஒருவன்தான்; இதில் குழப்பத்திற்கு இடமில்லை. கரிகாலன் என்னும் பெயர்கொண்ட அரசர் சங்க காலத்திலேயே பலர் இருந்தனர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்களது கருத்துரையின் சாரம் இவனுடைய வரலாற்றின் இறுதியில் தரப்பட்டுள்ளது. நாடு கரிகாலன் காவிரி ஆறு பாய்ந்த பகுதியை அரசாண்டான் என்பது அடிப்படைச் சான்றுகளில் வெளிப்படை. அவன் உறந்தையைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்றும், பின்னர்த் தன் அரசச் சுற்றத்தாரோடு புகாருக்கு வந்து அமர்ந்து, தன் தலைநகரை மாற்றிக் கொண்டான் என்றும் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.9 இதனால் இவன் கிட்டத்தட்ட சோழ நாடு முழுவதையும் விரிவான பரப்பில் ஆண்டுவந்தான் என்பது தெளிவாகிறது. இவன் கழார்த் துறைக்குத் தன் குடும்பத்தாருடன் வந்திருந்து அத்தியின் நீர் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்த தாகவும்,10 இடையாறு என்னும் பகுதி
5. அகம். 246 : 8 - 12 6. புறம். 65 : 6 - 11 7. அகம். 55 : 10 - 12 8. புறம். 66 : 6 - 8 9. பட்டினப். 285 10. அகம். 376 : 10 - 11 |