பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்339

12. புறம். 66 : 1 - 2

13. ௸ 126 : 14

தந்தை14

கரிகாலன் ‘உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்’ என்று குறிப்பிடப்படுகிறான். இதில் சிறுவன் என்பது மகன் என்னும் பொருளைத் தருகிறது. ‘இளையோன்’ என்பது இளஞ்சேட் சென்னி என்பவனைக் குறிக்கிறது என்பதை அப் பெயர்களுக்கு முதலிலுள்ள ‘உருவப் பஃறேர்’ என்னும் அடைமொழியால் உணரலாம். இதனால், கரிகாலனது தந்தை, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பது பெறப்படும்.

அரியணையேறல்

கரிகாலன் தாய் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தபோதே அவனது தந்தை இறந்துவிட்டான். எனவே, அரசாட்சிப் பொறுப்பு அப்போதே அவனுக்குக் கிடைத்துவிட்டது. இது ‘தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி’ என்று பொருநராற்றுப் படை15 குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

இந்த நிலையில் இவன் சார்பாக இருந்து ஒருவன் ஆட்சிப் பொறுப்பினை மேற்கொண்டிருந்தான் என்று நம்பலாம். இவ்வாறு அரசு பொறுப்பினை மேற்கொண்டிருந்தவன் அவனது தாய்மாமன் என்று கூறப்படுகிறது. இதனையும் இயல்பென்று நாம் ஏற்கலாம். தாய்மாமன் பெயர் இரும்பிடர்த்தலையார் என்று கூறப்படுகிறது. இரும்பிடர்த் தலையார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் சங்ககாலத்தில் பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியைக் கண்டு வாழ்த்திப் பாடி அறிவுரை கூறியுள்ளதைப் புறநானூற்றில் நாம் காண்கிறோம். இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் தம் பாடலில் ‘இரும்பிடர்த் தலையிருத்து’ என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அதுகொண்டு இவரை இரும்பிடர்த்தலையார் என்று வழங்கி வருகின்றனர். இது போன்ற பெயர் அமைப்புகள் பல சங்ககாலப் புலவர்களுக்கு அமைந் துள்ளன. இந்த அமைப்பு நமக்கு ஓர் உண்மையை வெளிப்படுத்து கின்றது. நூலைத் தொகுத்தவருக்குப் பாடலைப் பாடிய ஆசிரியரின் பெயர் தெளிவாகத் தெரியாவிட்டால், அவர் ஏதோ தம் மனம்போல் குறிக்காமல் உண்மைக்கு முதலிடம் தந்து அவரது பாடலிலிருக்கும்


14. பொருநர். 130

15. பொருநர். 132