பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 345 |
என்று எண்ண வேண்டும். கரிகாலனுக்கும் இலங்கைக்கும் வாணிகத் தொடர்பு இருந்ததைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. எனவே, கரிகாலனது இலங்கை வெற்றியை உண்மை எனக் கொள்ளலாம். கொடை36 கரிகாலன் பாணர்களுக்குக் கொடை வழங்கினான். உணவு, உடை, யானை, தேர் முதலானவை அவன் கொடை வழங்கிய பொருள் களில் சில. பாணர்ககுப் பொன் தாமரை செய்து அணிவித்ததும், நான்கு குதிரைகள் பூட்டிய தேர் நல்கியதும். அத்தேரை நல்கும்போது ஏழடி பின்சென்று மரியாதை செலுத்தி வழங்கியதும், பொருநர் தலையி லிருந்த ஈரையும் பேனையும் வாங்கிவிட்டதும், பொருநர்கள் தாம் செல்ல விரும்பியதைக் குறிப்பிட்டபோது இப்போதே செல்ல வேண்டுமா? இன்னும் சில நாளேனும் என்னுடன் தங்கலாகாதா? என்னும் பொருள்பட ‘அகறிரோ’ என்று அன்புடன் அருள்கனியக் கூறியதும் இவனது கொடைப் பாங்கில் குறிப்பிடத்தக்கவை. ஆட்சி இவனது ஆட்சி செங்கோலாட்சியாக அமைந்திருந்தது. அஃது அறத்தை அடிப்படையாகக் கொண்டது. இவனது மேலாண்மையில் பல நாடுகள் இருந்தன. அவற்றிற்குத் தனித்தனி அரசுகள் இருந்தன. அவற்றையெல்லாம், தன்னுடைய ஒரு குடைக்கீழ் இவன் ஆண்டான் அரசுகள் எல்லாம் ஒருமைப்பாட்டு உணர்வுடன் இவன் தலைமையின்கீழ் திரண்டிருந்தன. அந்த அரசு களுக்கிடையே அடிமைநிலை இல்லை; ஆதிபத்தியக் கோட்பாடே பின்பற்றப்பட்டது. பெருந் தன்மையுடைய நட்புறவே இருந்தது. இவ்hறு இவன் பெருஞ் சிறப்புடன் அரசாண்டான்.37 சிறப்புச் செயல்கள் நாட்டு மக்களின் நலனுக்காக இவன் செய்த ஆக்கப் பணிகள் பல.
36. பொருநர். 74 - 78, 158 - 171; புறம். 224 37. ௸ 226 - 230 |