346 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மக்கள் நலனுக்காக உணவளித்து உதவும் அறம் செய்யும் அட்டில் சாலை (அன்னசத்திரம்) ஒன்றை இவன் புகார் நகரத்தில் அமைத்திருந்தான்.38 இவனுடைய காலத்திற்கு முன்னர். நாட்டிலிருந்த குடி மக்களில் சிலர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் நிலைமை இருந்தது. இவன் இந்த நிலைமையை மாற்றி, இந் நாட்டிலேயே விருப்பமுடன் தங்குவதற்குரிய வசதிகளைச் செய்தான்.39 பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட காட்டைத் திருத்துதல், குளம் வெட்டுதல் போன்ற நாட்டை வளப்படுத்தும் செயல்கள், புதிய குடியேற்றங்களை அமைத்துத் தன் ஆட்சிப் பரப்பின் எல்லையை விரிவுபடுத்தியதைக் காட்டும். வேளாண்மைக்கு உதவி40 இவன் காடுகளை வெட்டி விளைநிலமாக மாற்றினான்; குளங்கள் வெட்டி வெள்ளநீரைத் தேக்கிவைத்துப் பாய்ச்சி, நிலத்தை நீர்வளமுள்ளவையாக மாற்றினான். காவிரிக்குக் கரை அமைத்தல் இலங்கையில் கரிகாலன் வெற்றி பெற்றபோது 12 ஆயிரம் பேர் இலங்கை மக்களைச் சிறைப்பிடித்து வந்து, அவர்களைக் கொண்டு தனது நாட்டிலுள்ள காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை அமைத்துக் கொண்டான் என்று இலங்கையின் கால்வழிச் செய்திக் கோவை ஒன்று குறிப்பிடுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தெலுங்கச் சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தெலுங்கச் சோழர்கள் தங்களைக் காவிரிக்குக் கரை அமைத்த கரிகாற் சோழன் வழிவந்தவர் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் கூற்று கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றது. கல்லணை இந்தக் கரிகாலனால் கட்டப்பட்டது என்று ஒரு செவி வழிச் செய்தி உண்டு; தெளிவான அகச்சான்று கிடைக்கவில்லை. இராச ராசனுடைய அண்ணனான ஆதித்த கரிகாலனே கல்லணையைக்
38. பட்டினப். 42 - 46 39. அகம். 141 : 22 - 24 40. பட்டினப். 283 - 284 |