| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 371 |
4. இருவரும் ஒருவனே என்பதைத் தெரிவிக்கின்றன (ப-ர்) 5. புறம். 60 : 7 - 9 6. ௸ 5 : 59 கொடை இவனது ஆட்சிக் காலத்தில் இன்னல்கள் பல நேர்ந்தன என்று கண்டோம். அந்த இன்னற் காலத்தில் இவனைக் கண்டு, குமரனார் என்னும் புலவர் பாடிப் பரிசில் வேண்டினார். இந்தக் குமரனாரின் சொந்த ஊர் கோனாட்டு எறிச்சலூர். கோனாடு என்பது இப்போதுள்ள புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் இருந்தது. அங்கிருந்து இவர் உறையூர் வந்து இவனைக் கண்டு பாடினார். பாடலில் அவர் இந்தச் சோழன் நல்லறிவுடையவன் என்றும், அவனது வறுமையை என்றும் தாம் எண்ணிப் பார்க்கும் தன்மை உடையவர் என்றும் கூறுகிறார். புலவரிடம் பண்பறிந்து ஒழுகாதவர், நாற்படையில் வலிமை மிக்க வேந்தராயினும் அவர்களைத் தாம் வியந்து மதிப்பதில்லை என்றும், அவர் குறிப்பிடுகிறார். சோழன் பரிசில் நல்காவிடினும் அவனை இவர் பாடியுள்ளார்.7 தோற்றம் அவையில் வீற்றிருக்கும்போது பனைக்கொடிக் கடவுள் இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளார்.8 இந்தக் கடவுள் வெள்ளை நிறத்தவர். பாண்டியனுக்கு நீலநிறத் திருமால் உவமை கூறப்பட்டுள்ளார். எனவே, பாண்டியனைக்காட்டிலும் இந்தச் சோழன் சற்றேனும் வெளுப்பான மேனி உடையவனாயிருந்தான் என்பது பெறப்படும். கூர்மையான வாளைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவனாய் அதனுடன் தோற்றமளித்ததையும், பக்கத்தே வெற்றியின் அறிகுறியாக முரசு முழங்க அவன் உலாவந்த காட்சியையும் தாமோதரனார் குறிப்பிடுகிறார். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழவேந்தருள் சிறப்புமிக்க மாபெரும் மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆவான். இவனுக்குப் பிறகு ஓர் அளவிற்குப் புகழ்பெற்றவன் சோழன் செங்கணான் ஆவான். சேர சோழ பாண்டியர் ஒருமைப்பாடு தமிழ்நாட்டு மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர் தம்முள் பகைமைகொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொள்வது
7. ௸ 197 8. ௸ 58 : 14 |