பக்கம் எண் :

372மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

வழக்கமாக இருந்துவந்தது. இவர்களுள் இருவர் ஒன்றுசேர்ந்து மூன்றாமவனைத் தாக்குதல் உண்டு. இந்த நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாக நாம் காணும் அளவில், இவன் காலத்தில் மூவேந்தரும் அரசியல் முறையில் ஒன்றுகூடி இணைந்து நண்பர்களாகச் செயலாற்றத் தொடங்கினர்.

சேர அரசன் மாரிவெண்கோ, பாண்டிய அரசன் கானப் பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி ஆகியோர் இவனுடன் கூடித் தமிழக முன்னேற்றத்திற்காகத் திட்டமிடத் தொடங்கினர். இந்தக் காட்சியைக் கண்ட ஒளவையார் ‘இன்றுபோல் என்றும் ஒருமைப் பாட்டுடன் வாழவேண்டு’ மென்று வாழ்த்தினார்.9

அப்போது அவர் பார்ப்பனர்க்குப் பூவும் (நிலமும்) பொன்னும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதும். மகளிர் மதுவூட்ட மகிழ்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதும் நம்மை எண்ணத் தூண்டும் செய்திகள் ஆகும்.

சுடுதீ விளக்கம்

குதிரை, யானை, காலாள் படைகளின் துணைகொண்டு தனது பகைவர் நாடுகளைத் தாக்கினான். அங்கிருந்த நன்னீர்த் துறைகளில் தன் யானைகளைப் படியச் செய்து கலக்கினான். விளைந்த வயல்களைக் கவர்ந்தான். வீடுகளில் உள்ள மரங்களை விறகாகக்கொண்டு மாலை வேளையில் தீ வளர்த்தான். இந்தத் தீ, சுடுதீ விளக்கமாக எரிந்தது. கரும்பு வயல்களுக்கும் தீ மூட்டினான். இதனால் வளமான வயல்கள் பாழாயின. இந்தப் போரைக் கொடிய போர் என்பதுபட ‘நாம நல்லமர்’- அஞ்சத்தக்க நல்ல போர் - என்று புலவர் குறிப்பிடுகிறார். இந்தப் போர் தொடங்கும்போது இவனுக்குச் சில அரசர்கள் உதவிசெய்ய முன்வந்ததாகத் தெரிகிறது. இவனோ அவர்களை யெல்லாம் வேண்டா என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தன் படைத்துணையுடன் போரிட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது.10

மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர்

சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இவனுக்கும் போர் மூண்டது. அப்போது இவன், தேர்வண் மலையன் என்பவனின்


9. புறம். 367

10. புறம். 16:10-19