| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 373 |
உதவியைப் பெற்றான். அவனது துணையால் சேரனை வென்றான். மலையன் வரலாற்றில் இப் போரைப் பற்றிய செய்திகளை மேலும் காணலாம்.11 படை பொன் பூண் பூட்டிய தந்தங்களைக் கொண்ட யானைப் படை, கச்சை அணிந்த குதிரைப்படை, மணி ஒலிகொண்ட தேர்ப்படை, வாளால் ஆர்வமுடன் வாழும் மறவர் படை ஆகியவை அடங்கிய இவனது தானை கடல் ஒலிபோல் முழங்கும்.12 அது வரம்பில்லாப் பெரிய படை. கொடை உலோச்சனார் கிணைப்பறையை முழக்கிக்கொண்டு வைகறைக் காலத்திற்கு முன்பே சென்றார். நல்ல பனிக்காலம் (மார்கழி மாதம் எனலாம்); அரண்மனையிலே சோழன் இனிமையாகத் தூங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் இவர் கிணையை முழக்கிக்கொண்டு சென்றார். (இந்தச் செயலை மார்கழி மாதம் விடியற் காலத்தில் தாதன் திருப்பாவை பாடிக்கொண்டு தெருத்தெருவாகச் செல்லும் நிகழ்ச்சியோடு ஒப்பிடலாம்.) ‘அறநெஞ்சத்தோன் வாழ்க’ என்று இடையிடையே அவர் வாழ்த்தினார். அந்த வாழ்த்து தனக்குத் தான் என்று கொண்டு தொலைநாடு செல்லும் உலோச்சனார் என்னும் புலவரைத் தடுத்து அழைத்துச் சென்று அந்தப் புலவர் கனவு காண்பது போல் மருளும்படி முத்தும், நல்ல உடைகளும், காலையில் பருகும் ‘தசும்பு’ என்னும் மதுக்குடங்களையும் அளித்தான். புலவர் பெற்று அவனைப் பாராட்டிப் பாடினார்.13 நாடு என்றால் அவன் நாடுதான் நாடு. வேந்து என்றால் அவன்தான் என்ற முறையில் அவரது பாராட்டு அமைந்திருந்தது. தோற்றப் பொலிவு மார்பிலே சந்தனம், புலவு நாற்றம் வீசும் வாள் ஆகியவற்றுடன் இவன் தோன்றினான். இவனது சீற்றம் முருகனது சீற்றம் போன்றது.14 முருகனது சீற்றம் இதிலிருந்து தெரியவருகிறது.
11. ௸ 125 . ௸ 377: 23 - 30 13. புறம். 377 : 16 - 20 14. அகம். 158 : 16 |