பக்கம் எண் :

374மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இராசசூயம் வேட்டல்

இவனது பெயர் பெருநற்கிள்ளி, புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இப் பெயருக்கு ‘இராசசூயம் வேட்ட’ என்னும் அடை மொழியைத் தந்துள்ளார்.15 இந்த அடைமொழியால் வைதீக சமயவழிப்பட்ட இராசசூய வேள்வியை இவன் செய்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

சோழன் செங்கணான்

சோழன் கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) காலமான பின் சோழநாட்டை அரசாண்ட சோழ அரசன் செங்கணான் எனலாம். சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற சோழ அரசர்களுள் கடைசி அரசன் இவன். இவன் சைவ அடியார்களுள் ஒருவரான செங்கட்சோழ நாயனார் அல்லன்.1

சங்ககாலத்தின் இறுதியில் சோழநாட்டை ஆண்ட சோழன், செங்கணான் என்று கூறினோம். சோழன் செங்கணான் காலத்தில் கொங்குநாட்டை அரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. பொறையர் குடி அரசர்களுள் கடைசி அரசன் இவன்.

சோழநாட்டை அரசாண்ட (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் கொங்குநாட்டை வென்று, சேரநாட்டை அரசாண்ட கோதை அரசனின் படைத் தலைவன் பிட்டனையும் வென்றான் என்று அறிந்தோம். கிள்ளிவளவனுக்குப் பிறகு சோழநாட்டை அரசாண்ட செங்கட்சோழன் கொங்குநாட்டை ஆண்ட கணைக்கால் இரும்


15. புறம். 16 கொளு

1 சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய திருத்தொண்டத் தொகையில் ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்’ என்று ஒரு செங்கட் சோழனைக் கூறுகிறார். நம்பியாண்டார் நம்பி இயற்றிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யில் கோச்செங்கட் சோழ நாயனாரைக் கூறுகிறார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் பாடினார். இந்தக் கோச்செங்சேட் சோழன் ஒருவரே என்று சிலர் கூறியும் எழுதியும் வருகிறார்கள். ஆழ்ந்து நுணுகி ஆராயும் போது இந்த இரண்டு செங்கணான்களும் வெவ்வேறு காலங்களில் இருந்தனர் என்பது தெரிகிறது.