பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 383 |
காரியாற்றுப் போர் இவனது தம்பி இவனுக்காகக் காரியாறு என்னுமிடத்தில் போரிட்டான். இவனை எதிர்த்துச் சேரரும் பாண்டியரும் போரிட்டனர். வெற்றி சோழர்களுக்குக் கிடைத்தது.5 பெயர்களும் அடைமொழிகளும் ‘கிளர்மணி நெடுமுடிக்கிள்ளி’,6 ‘அணிகிளர் நெடுமுடி அரசாள்வேந்தன்’,7 ‘மாவண் கிள்ளி’8 இவற்றில் முதல் இரண்டு தொடர்களும் இவன் தலையில் அணிந்திருந்த முடியின் சிறப்பை உணர்த்துகின்றன. ‘மாவண்கிள்ளி’ என்னும் தொடரும் ‘மாவண் சோழர்’9 என்னும் தொடரும் எந்த அளவு ஒற்றுமை உடையவை என்பது விளங்கவில்லை.10 இசைவெங்கிள்ளி இவன் அம்பர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அரிசிலாற்றங் கரையைச் சூழ்ந்த பகுதியை அரசாண்டு வந்தான். இவன் பாண்டிய அரசன் ஒருவனோடு போரிட்டு வெற்றி கண்டான்.11 இவன் புதுமை அழகுடன் திகழும் வெற்றிக் கொடியை நாட்டி மகிழ்ந்தான்.
5. மணிமே. 19 : 124 - 127 6. மணிமே. 24 : 29 7. ௸ 22 : 215 8. ௸ 19 : 127 9. அகம். 123 : 10 10. மாவண் கடலன் (அகம்.81 : 13) மாவண் கழுவுள் (அகம். 365 : 12) மாவண் தித்தன் (புறம். 352 : 9) மாவண் பாரி (புறம், 236 : 3 பதிற். 61 : 8) மாவண் புல்லி (அகம்.61 : 12, 359 : 12) மாவண் தோன்றல் (புறம். 121 : 4) அகம். 394 : 12 (தலைமகன்) என்னும் தொடர்களையும் ஒப்புநோக்கி எண்ண வேண்டியுள்ளது. 11. பாடலில் ‘பாண்டில்’ என்றே உள்ளது. இச்சொல்லுக்குக் ‘காளை’ என்பது பொருள். காளையொடு பொருதான் எனில் வெற்றிக்கொடி நாட்டினான் என்பது பொருளின்றி முடியுமாகையால் ஏற்புடை வழியில் பாண்டிய அரசன் என்று கொள்ளப்பட்டது. |