பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 389 |
அழிசி தன்னலத்துக்காகப் பாண்டியனோடு உறவு பூண்டான். அவன் மகன் சேந்தன் தன் நாட்டு மக்கள் நலனுக்காகத் தன் தந்தைக்கு மாறாகச் சோழப் பேரரசனுக்குத் துணையாய் விளங்கினான். இதனால், சேந்தன் போற்றப்பட்டான். இந்த நல்லவன் வழியே தீயவன் அறிமுகப்படுத்தப்படுகிறான். (கதைகளிலும் நாடகங்களிலும் நல்லவனைத் தலைவனாகவும், அவன் வழிக் கயவனை இழிந்தவனாகவும் காட்டுவது போலக் காட்டப்படுகிறான்.) சோழர் மருகன் நல்லடி நல்லடி என்னும் அரசன் ‘சோழன் மருகன்’ என்று குறிப்பிடப் படுகிறான். ‘சோழர்வழி வந்தவன்’ என்பது இதன் பொருள். இவன் ‘வல்லங்கிழவோன்’ என்று குறிப்பிடப்படுவதால் வல்லம் என்னும் ஊர்மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற அரசியல் தலைவனாக விளங்கினான் என்பது பெறப்படும். இவனது கோட்டைக் கதவுகளை இவனது பகைவர்கள் தாக்கி னார்கள். பகைவர்கள் தாக்குவார்கள் என்று நல்லடி எதிர்பார்க்காத போதே தாக்கினார்கள். ஆரியப் படை, வல்லம் என்னும் ஊரைத் தாக்கியது என்பதை யும், அவ்வூரை அடுத்திருந்த காவற்காட்டில் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்ட்டது என்பதையும் பின்னர்க் காணலாம். இந்த ஆரியரே இந்த நல்லடியைத் தாக்கியவர்கள் என்றும், நல்லடி அவர்களை முறியடித்தான் என்றும் நாம் கொள்ளலாம். சோழரின் படைத்தலைவர்கள் சோழ வேந்தர்களின் படைத்தலைவராய் விளங்கியவர்களுள் நான்கு பேர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. பழையன் (சோழன் மறவன்),13 ஏனாதி திருக்கிள்ளி,14 சோழிய ஏனாதி திருக்குட்டுவன்,15 மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.16 இந்த நால்வருள் பழையன் வரலாறும் மலையமான் வரலாறும் குறுநிலத் தலைவர்கள் வரிசையில் விளக்கப்படுகின்றன. சோழிய ஏனாதி
13. அகம். 326 : 9 14. புறம். 167 15. ௸ 394 16. ௸ 174 |