பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 391 |
இப் பெருஞ்சேரலாதன் பதிற்றுப்பத்தின் முதற்பத்தில் பாராட்டப் படும் பெருஞ் (சோற்றுதியன்) சேரலாதனாக இருத்தல் கூடும். இதைக் கருதுகோளாகக் கொண்டால், இவனுடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது போதரும். இமயவரம்பன் மகனே (கடல் பிறக்கோட்டிய) செங்குட்டுவனாவான். இதனால், சேரன் செங்குட்டுவன் கரிகால் பெருவளத்தானுக்கு இரு தலை முறைகள் பிற்பட்டவனாவான். கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியது. அதன் சிறப்பினைப் ‘பெரிபுளூஸ்’ எனும் நூல் சுட்டுகிறது. இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் கி. பி. 81-க்கும் கி.பி. 96-க்கும் இடைப்பட்ட காலமாகும்.8 எனவே, இதற்கு முன்பே கரிகாலனால் பூம்புகார் வலிவும் பொலிவும் பெற்றிருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இதனால், கரிகாலன் கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவனாகத் தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவன் - கயவாகு (காமனி அபயன்) காலக் கணிப்பினை அறிஞர்கள் கணித்துள்ளனர். பரணவிதானே எனும் இலங்கை வரலாற்றறிஞர் கயவாகுவின் காலத்தைக் கி. பி. 111 - 136 என்று கணக்கிட்டுள்ளார்.9 சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் குடமுழுக்கு விழா நடத்தியது, அவனுடைய ஆட்சியின் இறுதிப் பகுதியிலாகும். அப்பொழுது தான் கயவாகு ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளே கழிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கி.பி. 115-ல் வஞ்சிமாநகரில் இத் திருவிழா நடந்ததாகக் கூறலாம். இதற்குப் பிறகு நான் கைந்து ஆண்டுகளே செங்குட்டுவன் ஆட்சி செய்ததாக அறிகிறோம். அவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்துப் பதிகம் தெரிவிக்கிறது. இவ்வடிப்படையில், செங்குட்டுவன் கி. பி. 65 முதல் கி. பி. 120 வரை ஆட்சி செய்தவனாகலாம். அவனுடைய தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகப் பதிற்றுப்பத்தின் பதிகத்தால் அறிகிறோம். அவன் கி. பி. 7 முதல் கி. பி. 65 வரை ஆட்சி செய்தவ னாகலாம். இவனுடைய தந்தை பெருஞ்சேரலாதன் கரிகாலனோடு போரிட்டு மாண்டான். அவனுக்குப் பிறகு இவன் அரசுகட்டில்
8. McCrindle, Indian Antiquary, Vol. VIII,p. 145 9. Paranavitane, History of Ceylon, Vol. I, pp. 124-126, 181-185 |