பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்409

நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். வார்த்திகன் நிகழ்ச்சியில், அறியாத மக்களின் சொல்லைக் கேட்டு, இவன் கொடுமை செய்தது போலவே கோவலன் நிகழ்ச்சியிலும் அரண்மனைப் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு இவன் கோவலனைக் கொன்றுவிடச் செய்கிறான். முனனர்ச் சிறையில் இருந்து விடுதலையால் அப் பிழை பொறுக்கப் பட்டது. இப் பொழுது கொலையுங்ணட உயிருக்கு ஈடாகத் தன் உயிரையே கொடுக்கவேண்டிய நிலை நேர்ந்துவிடுகிறது. தன் தவற்றினை உணர்ந்தபோது, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர்துறந்தான். பாண்டி மாதேவியும் கோவலன் கொலைக்கு ஒருவகையில் காரணமாகையால் கணவனுடன் தானும் மாண்டு செங்கோலை நிலை நாட்டுகிறாள்.

ஆரியப்படையை வென்றது

தமிழ்நாட்டுத் தெற்கிலிருந்த நிலப்பகுதியைக் கடல் கொண்டமையால் தமிழர், தம் நாட்டுப் பரப்பை வடக்கில் விரிவாக்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆரியரும், தெற்கில் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் நிகழ்ந்த போர்களில் நெடுஞ்செழியன் ஆரியப் படைகளை வென்றிருத்தல் வேண்டும். ஆகையால், இவனுக்கு ‘ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்’ என்னும் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இங்குச் சுட்டப்படும் ‘ஆரியர்’, தொடக்க காலப்பல்லவராக இருத்தல் கூடும்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போரில் ஏழு அரசர்களை வென்றவன் ஆவான்; வென்வேற் செழியன் என்றும் ஒரு பாடலில் குறிப்பிடப்படுகிறான்.5 இப் பாடல் பாண்டியன் நெடுஞ்செழியன்மீது பாடப்பட்டதாகக் குறிப்பிடப் படுகிறது.6 எனவே, ‘வென்வேற் செழியன்’பாண்டியன் நெடுஞ் செழியன்’ ஆகிய பெயர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே சுட்டு கின்றன. இப் போரில் ஏழு பேரை வென்ற அரசனைப் ‘பசும்பூட் செழியன்’


5 ‘தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து

மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்

நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ (புறம். 19 : 2 - 4)

6 ௸ 19 : 2 4