பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 411 |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இன்மையால், பாண்டிய நாடு மழை வளங்குன்றி நலிவுற்றது.13 இந் நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.14 பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல்நகரைக் கைப்பற்றி அரச னானான்.15 பின் இவன் எவ்வியை வென்று அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றினான். வேளிரை வென்று முத்தூற்றுப் பகுதியைக் கைப்பற்றினான். கொங்கர்களை அவர்களது நாட்டைவிட்டுத் துரத்தினான். சேர அரசனுடைய முசிறியையும் கைப்பற்றினான். இவ்வகையில் இவனது நாட்டுப் பரப்பு விரிவடைந்தது. இவற்றால் அள்ளூர், சிறுமலை முதலிய பகுதிகள் இவனது ஆட்சிக்குட்பட்டன.16 போர்கள் ஏழு அரசர்கள் ஒருங்குகூடித் தலையாலங்கானம் என்னு மிடத்தில் இந்த நெடுஞ்செழியனைத் தாக்கினர்.17 சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஏழு அரசர்கள் இந்தக் கூட்டுக் குழுவிலிருந்த பகையரசர் களாவர்.18 இப் போர் நடந்தபோது நெடுஞ்செழியன் மிகவும் இளைஞனாக இருந்தான் என்று தெரிகிறது.19 இந்தப் போரைப்பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களில் குறித்துள்ளனர். வேற்படையின் துணைகொண்டு அவன் வெள்ளிபெற்றதுபற்றியும், பிற அரசர் துணையின்றிப் போரிட்டு வென்றது. போருடை அணிந்த வீரர்கள் பேரெண்ணிக்கையில் வந்து தாக்கியது, கிணை முழக்குடன் ஒரு பகலிலேயே ஆரவாரமின்றி அடக்கத்துடன் திறமையாகப் போரிட்டது. தலையாலங்கானப் போரின்
13. சிலப். 23 : உரைபெறு கட்டுரை 14. பசும்பூண் பாண்டியன் எனக்கொள்ள இடமுண்டு 15. அகம். 149 : 13-14, 231 : 12-13; நற். 39 : 9 - 10 16. அகம். 46 : 14, 47 : 16 17. இத் தலையாலங்கானம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது. 18. அகம். 36 : 15 - 20 19. புறம். 77 : 6 |