பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 413 |
போல் அமைந்திருந்தது என்று கூறப்படுவதால், சிறையில் அடைக்கப் பட்டான் என்பது தெளிவாகிறது. நெடுஞ்செழியனை எதிர்த்த சோழன் இவன் பெயர் செம்பியன் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் வழியில் வந்தவன் எனலாம். இச் செய்தியின் விளக்கத்தைச் சோழர் வரலாற்றில் நாம் கண்டோம். கடற்போர் தலையாலங்கானத்துப் போர் நெடுஞ்செழியனுடைய இளமைக் காலத்தில் நடந்ததாகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையை ஆண்ட அரசன் இன்னான் என்பது தெளிவாக விளங்கவில்லை. பசும்பூண் பாண்டியன் போன்ற அரசர்கள் இடைக் காலத்தில் அரசாண்டு உட்பூசலில் மாண்டுபோய், நாடு அரசனின்றி இருந்தது எனக் கருதலாம். இந்நிலையில் நெடுஞ்செழியன் கூடல் நகரத்தைத் தாக்கிப் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றி யிருக்க வேண்டும்.21 நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினைக் கைப் பற்றுவதைச் சோழனும் சேரனும் எதிர்த்துள்ளனர். இவர்களுடைய முயற்சி வெற்றிபெறாது. தங்களுடைய முரசங்களைப் போர்க்களத்தி லேயே போட்டுவிட்டு ஓடினர். நெடுஞ்செழியன் பெருவெற்றி பெற்றான்.22 எவ்வி, வேளிரோடு போர் நெடுஞ்செழியன் கொற்கையிலிருந்து மதுரைக்குத் தலை நகரை மாற்றிக்கொள்ளவே, பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் கிழக்குப் பகுதியில் மிழலைக் கூற்றத்தை ஆண்டுவந்த எவ்வி என்ற குறுநில மன்னன் பாண்டியனுக்குக் கப்பம் கட்டாது ஆளத்தொடங்கினான் போலும். இதனால், நெடுஞ்செழியன் எவ்வியைத் தாக்கி நல்லூரைத் தன்னகத்தே கொண்ட அவனது மிழலைக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அக்காலத்தில் முத்தூறு என்னும் பகுதியில் வாழ்ந்த தொன்முது வேளிர் என்னும் குடிமக்கள், தம்முள் ஒன்று கூடி நெடுஞ்செழியனை எதிர்த்தனர். நெடுஞ்செழியன் அவர்களை
21. ‘நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’ (நற்.39: 7 - 10 22. ‘ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதிற்பறம் தழீஇ - யாத்தகுடை’ (அகம். 335 : 10-14) |