பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 415 |
முசிறியையும் வென்ற செய்திகளுக்கு இவ்வெற்றி தொடர்புடைய தாகிறது. முதுவெள்ளிலையும், முதுபொழில் மண்டிலமும் முதுவெள்ளிலை மருதநில வளமும் நெய்தல்நில வளமும் ஒருங்கமையப்பெற்ற ஓர் ஊர். இவ்வூரை நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்ட பிறகு இவனது நல்லாட்சியில் மகிழ்ந்து அவ்வூர் மக்கள் இவனைப் பெரிதும் பாராட்டினர்.24 முதுபொழில் மண்டிலம் என்பது சிறப்பாக ஓர் இடத்தைக் குறிப்பது அன்று. நாவலந் தண் பொழிலாகிய நாடு முழுவதுமே முதுபொழில் மண்டியலமாகும். இவன் பல நாடுகளை வென்று தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த செயலே முதுபொழில் மண்டலம் முற்றியதாகக் கூறப்படுகிறது.25 ஆட்சி குளம் வெட்டி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும் என்று புலவர் ஒருவர் இவனிடம் அறிவுரை கூறினார்.26 இவரது அறிவுரைப் படி இவன் பெருங்குளம் என்னும் பெயருடைய குளத்தை அமைத்தான்.27 இவன் நான் மறைகள் கூறும் வேள்ளிகளைச் செய்தான்.28 அன்றியும் களச்சோறு வழங்கும் வேள்வியும் செய்தான்.29 இந்த வேள்விகள் பல நாடுகளை வென்றதன் நினைவாகச் செய்த அறக் கொடைகள் ஆகும். இந்த அறக்கொடைகள் வீரர்க்கும், பாணர் முதலானோர்க்கும், நான்மறைவல்ல அந்தணர்களுக்கும் வழங்கியவையாகும். புறநானூற்றுச் செய்யுளில் நம்பி நெடுஞ்செழியனைப்பற்றிக் கையறு நிலையில் பேரெயின் முறுவலார் என்ற புலவர் பாடியுள்ளார். நம்பி நெடுஞ்செழியன் போரில் ஈடுபட்டு உயிரிழந்தான். போர்க் களத்தில் இறந்த அவனுடைய தலைமாத்திரம் கிடைத்த நிலையில் பேரெயின் முறுவலார் பின்வருமாறு இரக்கம் கொண்டு பாடியுள்ளார். ‘நம்பி நெடுஞ்செழியன், சந்தனம் பூசி மலர்மாலையணிந்து உரிமை மகளிரைத் தழுவி மகிழ்ந்தான்; பகைவர்களை அடியோடு ஒழித்தான்;
24. மதுரைக். 119 25. ௸ 190 26. புறம். 18 : 28 - 30 27. நற். 340 : 3 28. புறம். 26 : 13 - 15 29. ௸ 372 : 5 - 13 |