பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்419

மாலைமாறன்

மாறன் என்று பாண்டியரை உணர்த்தும் சொல் இவனது பெயரில் உள்ளதால் இவனது வரலாற்றை இங்குக் கூறுகிறோம். மற்றபடி, இவன் ஒரு புலவன் என்ற நிலையிலேயே காணப்படுகிறான். இவனது பாடல் சங்கநூலில் இடம் பெற்றுள்ளது.12 களவு வழியில் கூடிய தலைவனை எண்ணி எண்ணி உருக்குலைந்த தன் நிலையைப்பற்றிக் கூடக் கவலைப்படாது, தலைவன் மீது பழிதூற்றுவார்களே என்று தலைவி ஒருத்தி வருந்துவதாக இவன் பாடியுள்ள பாடல் பெண்களின் பெருந்தகைமையைப் புலப்படுத்துவதாக உள்ளது.13

பழையன் மாறன்

பழையன் என்னும் பெயர் கொண்ட இருவர் சங்ககால வரலாற்றில் காணப்படுகின்றனர். ஒருவன் மோகூர் மன்னன் என்ற முறையில் அறிமுகமாகிறான்.14 மற்றொருவன் ‘போர்’ என்னும் ஊரின் தலைவன். மோகூர்ப் பழையன் பாண்டிய அரசர்களுக்கு உறுதுணையாய் விளங்கியவன். போர்ப் பழையன் சோழர் படைத்தலைவன். வித்தை என்னும் இடத்தை ஆண்ட அரசன் ‘இளம் பழையன்’ மாறன் என்னும் பெயர் பெற்றுள்ளான்.15 மோகூர் அரசனைச் சேரன் செங்குட்டுவன் வென்றான். வித்தை அரசன் இளம்பழையன் மாறனை இளஞ்சேரல் இரும் பொறை வென்றான். போர் அரசன் பழையனை நன்னன் முதலான ஏழுபேர் கூட்டாகத் தாக்கிப் போரில் கொன்றனர். மாறன் என்றால் இவனையே குறிக்கும் அளவிற்கு இவனது பெயர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் பரவியிருந் தமையால் இவன், பெரும்பெயர் மாறன் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறான்.16 பாண்டியன், மோகூரின் ஆட்சிப் பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்திருந்தான்; கோசர் இவனது அரசவையைச்


12. குறுந். 245

13. குறுந். 2 - 6

14. பதிற். 44 : 14, 49 : 8: பதி. 5 : 13

15. பதிற். பதி, 9 : 7

16. மதுரைக். 772- 74