பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 433 |
பசும்பூண் பாண்டியன் ‘பசும்பூண்’ என்னும் அடைமொழியைமட்டும் கொண்டு இந்தப் பாண்டியனைத் தனியான ஓர் அரசன் என்று கொள்ள முடியுமா என்பது ஆய்விற்குரியது.5 இப் பெயர் கொண்ட அரசன், மதுரையில் இருந்து மிகச் சிறப்புடன் அரசாண்டதாகத் தெரிகிறது. அப்படி யிருந்தும் எந்தப் புலவரும் இவனை நேரில் கண்டு வாழ்த்திப் பாடியதாகப் புறநானூற்றில் பாடல்கள் இல்லை. எனவே, பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனாக இருக்கலாமென்று கருதப்படுகிறது. அரசுகட்டிலைக் கைப்பற்றிய போர் பாண்டிய நாட்டின் அரியணையைக் கைப்பற்றவே இவன் போராடி இருக்கிறான். போரில் வெற்றிகண்டதால் வெண்கொற்றக் குடையை உயர்த்திப் பெரும்புகழுடன் அரசாண்டிருக்கிறான்.6 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் இதே நிலையினன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகனை வென்றது அதிகன் என்பவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசன். பசும்பூண் பாண்டியன் ஒரு யானைப் படையுடன் சென்று அதிகனை வென்று தன் வெற்றிக்கொடியை உயர்த்தி. அவனது கொல்லி மலையில் யானைப் படையின் வெற்றி அணிவகுப்பை நடத்தினான். இப் போருக்குப்பின் அதிகன் பாண்டியனுடைய நண்பன் ஆனான். பின்னர்த் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் நாட்டைப் பறிகொடுத்து இந்தப் பாண்டியனின் படைத்தலைவனாக மாறிவிட்டான்.7 கொங்கரை ஓட்டியது அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவன். பசும்பூண் பாண்டியனும் அதிகனும் நண்பர்களாக மாறியபின் கீழைக் கொங்கரும் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். இந்நிலையில் மேலைக்
5. நற். 279 : 2; பெரும்பாண். 458 ; பரிபா. 3 : 53 6. அகம். 231 : 12 7. அகம். 162 : 18 |