434 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர அரசர்களுடன் சேர்ந்துகொண்டு பாண்டியனுக்கு எதிர்ப்பாய் விளங்கினர். பசும்பூண் பாண்டியன் இந்தக் கொங்கர்களோடு போரிட்டு அவர்களை நாட்டைவிட்டே துரத்தி விட்டான்.8 தங்களது வேற்படைகளைப் போர்க்களத்திலேயே எறிந்து விட்டுத் தப்பியோடிய கொங்கர். குடகடல்பக்கம் ஓடிவிட்டனர். இந்தப் போரில் இவனுக்கு ஆய் அரசன் உதவி செய்தான் எனத் தெரிகிறது.9 ஓடிய கொங்கர்களில் சிலர் வழியில் இருந்த நாட்டில் அரசாண்ட நன்னனுடன் சேர்ந்துகொண்டனர். நன்னன் மூவேந்தருக்கும் எதிரியாக இருந்தான். வாகைப் பறந்தலைப் போர் ஆய் எயினனுக்கும் நன்னது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனின் தலைநகர் பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி, ஆய் எயினனின் நகர் வாகையைக் கைப்பற்ற முயன்றான். வாகையைப் பாதுகாக்கப் பசும்பூண் பாண்டியன் தன் படைத்தலைவன் அதிகனை அனுப்பியிருந்தான். பாண்டியன் தலைவ னான அதிகனுக்கும், ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. போரில் நன்னனுக்கு உதவியாகக் கொங்கர்கள் உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானiடன் கொல்லப்பட்டான். இந்த நிகழ்ச்சியில் கொங்கர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.10 பொதியமலை வெற்றி அதிகனை வென்று கொல்லிமலையில் யானைகளை வெற்றி உலாவரச் செய்தான் இப் பாண்டியன் என்பதை முன்னரே பார்த்தோம். அதுபோலவே, இவன் பொதியமலையைக் கைப்பற்றினான் போலும்,11 இதன் பயனாகப் பொதியமலை அரசன் ஆய், அதிகனைப் போலப் பாண்டியனின் நண்பன் ஆனான். அதிகன் வாகைப் பறந்தலையில் பாண்டியனுக்காகப் போரிட்டது போலவே, ஆய் அரசன் கொங்கர்களை ஓட்டுவதில் பசும்பூட் பாண்டியனுக்கு உதவினான்.12
8. ௸ 253 : 4 - 5 9. புறம். 130 : 5 - 6 10. குறுந். 393 : 3 - 6 11. அகம். 338 : 5 - 6 12. புறம். 130 : 5 - 6 |