பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 459 |
இலக்கிய நூலிலா அல்லது சாசனங்களிலா? சாஸ்திரியார் சான்று காட்டாமல் மனம்போன படி எழுதிவிட்டார். ஞானசம்பந்தர், திருநாவுக் கரசரைப் போல நீண்ட ஆயுளுடன் இருந்தார் என்று தவறாகக் கருதிக் கொண்டு இப்படி எழுதிவைத்தார் போலும். 12-வயதுடைய பாண்டியன் மதம் மாறியபோது அவன் அரசியான பாண்டிமாதேவிக்கு வயது 10-ஆக இருக்க வேண்டும் என்று கூறினோம். 10-வயதுள்ள பாண்டிமாதேவி 14-வயதுள்ள சம்பந்தரைப் பார்த்து, “நீர் சிறுபிள்ளை, சமணருடன் நீர் எப்படி வாது செய்ய முடியும்?” என்று சொல்லுவாரா? அதற்குப் பதிலாகச் சம்பந்தர், “மானினேர் விழிமாதராய் வழுதிக்குமா பெருந்தேவிகேள் பானல்வா யொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்.” (சம்பந்தர். திருவாலவாய்ப் பதிகம்) என்று கூறுவாரா? ஆகவே சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவது உண்மைக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும். மதம் மாறிய பாண்டியன் நெடுமாறன் சம்பந்தரைவிட மூத்தவன் என்பதும் அப்போது அவனுக்கு வயது 25 அல்லது 30-க்குக் குறையாமலிருக்கும் என்பதும் விளங்குகிறது. இது நிற்க; பாண்டியன் நெடுமாறன் கி.பி. 670-இல் அரசாளத் தொடங்கினான் என்று சாஸ்திரியார் கூறுகிறார்.1 இந்தத் தேதியும் பொருத்தமாக இல்லை. ஏறக்குறைய 25ஆண்டுகளைக் கூட்டிக் கூறுகிறார். இது பொருத்த மற்றது என்பதைக் காட்டுவோம். வாதாபி நகரம் அழிக்கப்பட்ட கி. பி. 642-இல் சிறுத் தொண்டர் வாழ்ந்தவர். இதனைச் சாஸ்திரியாரும் ஒப்புக்கொள்கிறார். வாதாபிப் போர் முடிந்தவுடன் சிறுத்தொண்டர், சேனைத்தலைவர் பதவியி லிருந்து விலகிக் கொண்டு கணபதீச்சரத்தில் சைவத்தொண்டு செய்து வந்தார். அக் காலத்தில் அவருக்குச் சீராளன் என்னும் குழந்தை பிறந்தான். அக் குழந்தையின் ஐந்தாவது வயதில் ஞானசம்பந்தர் சிறுத் தொண்டர் இல்லஞ் சென்று சந்தித்தார். அப்போது ஞானசம்பந்தருக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கலாம். இவற்றைப் பெரிய புராணத்தி லிருந்து தெரிந்து கொள்ளலாம்.வாதாபிப் போர் நிகழ்ந்த பத்து ஆண்டுகட்குப் பிறகு சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்ததாகக் கொள்ளலாம். அந்த
1. The Pandian Kingdom |