460 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
ஆண்டு கி. பி. (642 + 10 =) 652 - ஆகும். இரண்டு ஆண்டுக்குப் பிறகு, உத்தேசம் கி. பி. 654-இல் சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கினார்.உத்தேசம் கி. பி. 670-இல் பாண்டியன் நெடுமாறன் அரசாட்சியை ஏற்றுக்கொண்டான் என்று நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார். சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கியது உத்தேசம் கி. பி. 654-இல் என்று மேலே காட்டினோம். 670-இல் பட்டம் பெற்ற பாண்டியனை, 652-இல் எவ்வாறு சம்பந்தர் சைவனாக்கியிருக்க முடியும்? பாண்டியன் அரச பதவியிலிருந்தபோதுதான் சம்பந்தர் அவனைச் சைவனாக்கினார்; பட்டம் பெறுவதற்கு முன்பு அல்ல சம்பந்தரோ 16-ஆண்டு மட்டும் உயிர்வாழ்ந்திருந்தவர். சம்பந்தர் தமது 12-ஆவது வயதில் கி. பி. 652-இல் சிறுத்தொண்டரைச் சந்தித்தார். 14-ஆவது வயதில் கி. பி.654-இல் பாண்டியனைச் சைவனாக்கினார். பிறகு தொண்டைநாட்டுக்குத் தல யாத்திரை சென்றார். தலயாத்திரை முடிய 11/2 அல்லது 2-ஆண்டு சென்றிருக்கும். பிறகு சீகாழிக்கு வந்தார். அப்போது இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அஃதாவது 16-ஆவது வயதில் உத்தேசம் கி. பி. 656-இல் திருமணத்தின்போதே உலக வாழ்க்கையிலிருந்து மறைந்தார். சாஸ்திரியார் கூறுவதுபோல 670-இல் பாண்டியன் பட்டத்துக்கு வந்தான் என்றால், 656-இல் மறைந்த சம்பந்தர் எப்படிப் பாண்டியனை மதமாற்றியிருக்க முடியும்? ஆகவே, சாஸ்திரியார் பாண்டியன் நெடுமாறனுக்கு அமைத்த ஆட்சி ஆண்டு தவறாகிறது. நெடுமாறன் ஆட்சிக்கு வந்த ஆண்டு உத்தேசம் கி. பி. 652-க்கு முனனதாக இருக்கவேண்டும் என்று விளங்குகிறது. (ஞானசம்பந்தர் கி. பி. 656-இல் மறைந்தார் என்று கூறினோம். இவருக்கு முன்னரே இவருடைய நண்பர்களாகிய சிறுத்தொண்டரும் திருநாவுக்கரசரும் உலகத்திலிருந்து மறைந்தார்கள். எப்படி என்றால், ஞான சம்பந்தர் திருமணத்திற்கு அவருடைய நண்பர்களான நாயன்மார்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால் சிறுத்தொண்ட நாயனாரும் திரு நாவுக்கரசு நாயனாரும் வரவில்லை. வாராத காரணம் இவ்விருவரும், திருமணத்திற்கு முன்னரே சிவபதவியடைந்ததுதான். இவ்விரு நாயன்மாரும் உத்தேசம் கி. பி. 655-இல் மறைந்தவராதல் வேண்டும்.) எனவே, எல்லோரும் ஒப்புக்கொண்டதும் சந்தேகத்துக்கு இட மில்லாததும் ஆன வாதாபி அழிந்த கி. பி. 642-ஐ அடிப்படையாகக் கொண்டு, அப்போரில் சம்பந்தப்பட்ட சிறுத்தொண்டர் அவருக்கு |