128 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
செல்வக் கடுங்கோவின் தந்தையாகிய அந்துவன் பொறையன் எத்தனையாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இருபது ஆண்டு அரசாண்டான் என்று கொள்வோம். அப்படியானல் அவன் உத்தேச மாகக் கி.பி. 92 முதல் 112 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிந்தோம். அவன் எத்தனைக் காலம் அரசாண்டான் என்பது தெரிய வில்லை. இருபது ஆண்டு ஆட்சி செய்தான் என்று கொண்டால் அவன் உத்தேசமாகக் கி.பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலுக்குப் பிறகு அரசாண்ட கணைக்கால் இரும்பொறையும் இருபது ஆண்டு அரசாண்டான் என்று கருதலாம். இவன் உத்தேசம் கி.பி. 190 முதல் 210 வரையில் இவன் அரசாண்டான் எனக் கொள்ளலாம். இவனுக்குப்பிறகு, கொங்கு நாட்டு அரசாட்சி சோழர் கைக்குச் சென்றது. சோழன் செங்கணான் கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான். ஏறக்குறைய 120 ஆண்டுக் காலம் கொங்கு நாடு, சேர பரம்பரையில் இளைய பரம்பரையைச் சேர்ந்த பொறையர் ஆட்சியில் இருந்தது. மேலே ஆராய்ந்தப்படி கொங்கு நாட்டுச் சேர அரசரின் காலம் (உத்தேசமாக) இவ்வாறு அமைகிறது: அந்துவன் பொறையன் (உத்தேசமாக) கி.பி. 92 முதல் 112 வரையில்
செல்வக்கடுங்கோ ””112 முதல் 137” வாழியாதன் பெருஞ்சேரலிரும் பொறை ”” 137 முதல் 154 ” இளஞ்சேரலிரும் பொறை ”” 154 முதல் 170” யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை ”” 170 முதல் 190” கணைக்காலிரும்பொறை ” ” 190 முதல் 210” |