பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 139 |
அடிக்குறிப்புகள் 1.`உமணர், கணநிரை மணியின் Mக்கும்’ (அகம். 303: 17-18). 2.`எருதே இளைய நுகமுணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணதறியுநர் யாரென உமணர், கீழ்மரத் தியாத்த சேமவச்சு’ (புறம். 102: 1-5). 3.`பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை. வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து’ நெடுநல்வாடை 141 - 142. 4. `கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து’ (சிலம்பு கட்டுரைகாதை - 181) இங்குப் பொற்றொடி என்றது பொன் வளையலையன்று, சங்கு வளையை. `பொற்றொடி பொலி வினையுடைய சங்கவளை. துர்க்கை கோயில் வாயிலே தன் கை வளையைத் தகர்த்து’ என்று பழைய அரும்பத வுரையாசிரியர் எழுதுவது காண்க. |