பக்கம் எண் :

  :

16. அயல் நாட்டு வாணிகம்

சங்க காலத் தமிழகம் வெளிநாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது போலவே கொங்கு நாடும் அயல்நாடு
களுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆனால், கொங்கு நாட்டின் கடல் வாணிகத் தொடர்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் யாதொரு செய்தியும் காணப்படவில்லை. சங்கச் செய்யுள்களில் முசிறி, தொண்டி, நறவு, கொற்கை, புகார் முதலிய துறைமுகப்பட்டினங்களில் யவனர் முதலியவர்களின் கப்பல்கள் வந்து வணிகஞ் செய்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால், கொங்கு நாட்டுடன் அயல்நாட்டு வாணிகர் செய்திருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனாலும், கிரேக்க உரோம நாட்டவராகிய யவனர்கள் எழுதியுள்ள பழைய குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் இருந்த வாணிகத் தொடர்பு தெரிகின்றது.

முசிறி, தொண்டி, நறவு முதலிய மேற்குக் கடற்கரைப் பட்டினங் களில் யவனர்கள் முக்கியமாக மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். பாண்டியரின் கொற்கைத் துறைமுகப்பட்டினத்திலிருந்து யவனர் முக்கியமாக முத்துக்களை வாங்கிக்கொண்டு போனார்கள். சோழநாட்டுப் புகார்த் (காவிரிப்பூம்பட்டினம்) துறைமுகப்பட்டினத்தி லிருந்து, சாவக நாடு எனப்பட்ட கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து கிடைத்த சாதிக்காய், இலவங்கம், கர்ப்பூரம் முதலிய வாசனைப் பொருள்களையும், பட்டுத் துணிகளையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். உள்நடாகிய கொங்கு நாட்டிலிருந்து அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். யானைத் தந்தங்களையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். கொங்கு நாட்டிலிருந்தும் யானைத் தந்தங்கள் அனுப்பப் பட்டன. கொல்லிமலையில் இருந்தவர் யானைக் கொம்புகளை விற்றார்கள்.1

கொங்கு நாட்டு நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக் கொண்டு போனதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத்