148 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
கலந்தந்த பொற் பரிசம் கழித்தோணியாற் கரை சேர்க்குந்து.” (புறம். 343 : 3- 6) என்று கூறுகிறார். சேர நாட்டு முசிறித் துறைமுகத்தில் யவனக் கலங்கள் (மரக் கலங்கள்) பொற்காசுகளைக் கொண்டு வந்து நின்றபோது, தோணிகளில் கறி (மிளகு) மூட்டைகளை ஏற்றிக்கொண்டு போய் யவன மரக்கலங்களில் இறக்கிவிட்டு அதற்கு விலையாக அவர்கள் கொடுத்த பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்பது இதன் பொருள். புலவர் தாயங்கண்ணனாரும் இதைக் கூறுகிறார். “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.“ (அகம். 149: 7- 11) இதில், யவனருடைய மரக்கலங்கள் முசிறித் துறை முகத்துக்கு வந்து கறியை (மிளகை) ஏற்றிக்கொண்டு பொன்னைக் (பொன், வெள்ளிக் காசுகளை) கொடுத்துவிட்டுச் சென்றது கூறப்படுகிறது. உரோமாபுரியிலிருந்த பிளைனி (Pliny) என்னும் அறிஞர் கி.பி. 70ஆம் ஆண்டில் உரோமாபுரிச் செல்வம் கிழக்கு நாடுகளுக்குப் போவதைக் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நூறா யிரம் ஸெஸ்டர் (11, 00, 000 பவுன்) மதிப்புள்ள பொன்னும் வெள்ளியும் வாணிகத்தின் பொருட்டுக் கிழக்கு நாடுகளுக்குப் போய்விடுவதை அவர் கண்டித்திருக்கிறார். உரோம நாட்டுச் சீமான்களும் சீமாட்டி களும் வாசனைப் பொருள்கள், நகைகள் முதலியவைக்காக உரோம நாட்டுப் பொன்னை விரயஞ் செய்ததாக அவர் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள், யவன வாணிகர் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துப் பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள் என்று கூறியது போலவே பிளைனியும் உரோமாபுரிப்பொன் கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுகிறது என்று கூறியிருப்பது காண்க. உரோமாபுரிச் சாம்ராச்சியத்தில் அக்காலத்தில் ஸ்பெய்ன் தேசமும் அடங்கியிருந்தது. அந்த ஸ்பெய்ன் தேசத்தில் தங்கச் சுரங்கம் |