பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு149

இருந்தபடியால், அங்கிருந்து உரோமாபுரிச் சக்கரவர்திகளுக்கு ஏராளமாகப் பொன் கிடைத்தது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தப் பொன்னைக் கொண்டு நாணயங்கள் அடித்து வெளிப்படுத்தினார். அந்த நாணயங்களைக் கொண்டுவந்த யவன மாலுமிகள், அதிகச் சரக்குகளை (முக்கியமாக மிளகை) ஏற்றிக் கொண்டு போவதற்காகப் பெரிய மரக்கலங்களைக் கொண்டு வந்தார்கள்.

இவ்வாறு கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடைப்
பெற்ற யவன - தமிழ வாணிகத்தினால் கொங்கு நாடு கதிர் மணிகளை யவன நாட்டுக்கு விற்றுப் பெரும் பொருள் ஈட்டியது. அந்த யவன நாட்டுப் பழங்காசுகளில் சிறு அளவுதான் இப்போது அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ள உரோம நாணயங்கள். இன்னும் புதையுண்டிருக்கிற உரோம நாணயங்கள் எவ்வளவென்று நமக்குத் தெரியாது.

கொங்கு நாட்டிலிருந்து யவன வாணிகர் வாங்கிக்கொண்டுபோன இன்னொரு பொருள் யானைத் தந்தம். கொங்கு நாட்டைச் சார்ந்த யானைமலைக் காடுகளிலும் ஏனைய காடுகளிலும் யானைக் கொம்புகள் கிடைத்தன. சேர நாட்டு மலைகளிலும் யானைக் கோடுகள் கிடைத்தன. யவன வாணிகர் யானைக் கோடுகளையும் வாங்கிச் சென்றார்கள். கொங்கு நாட்டுக் கொல்லி மலை ஓரிக்கு உரியது. கொல்லி மலையில் வாழ்ந்த குடிமக்கள், விளைச்சல் இல்லாமல் பசித்தபோது தாங்கள் சேமித்து வைத்திருந்த யானைக் கொம்புகளை விற்று உணவு உண்டார்கள் என்று கபிலர் கூறுகிறார்.8

சேரன் செங்குட்டுவன் வேனிற்காலத்தில் சேரநாட்டுப் பெரியாற்றுக் கரையில் சோலையில் தங்கியிருந்தபோது அவனிடம் வந்த குன்றக் குறவர் பல பொருள்களைக் கையுறையாகக் கொண்டு வந்தனர். அப் பொருள்களில், யானைக் கொம்பும் அகிற் கட்டைகளும் இருந்தன.9 சேரநாட்டு, கொங்குநாட்டு மலைகளில் யானைக் கொம்புகள் கிடைத்தன என்பது இதனால் தெரிகிறது. யவனர் வாங்கிக்கொண்டு போன பொருள்களில் யானைக் கொம்பும் கூறப்படுகிறது.

கொங்கு நாடு உள்நாடாகையால் அதற்குக் கடற்கரை இல்லை; ஆகையால் துறைமுகம் இல்லை. ஆனால், கொங்குநாட்டை யரசாண்ட ‘பொறையர்’ சேர அரசரின் பரம்பரை யாராகையால், அவர்கள் சேர நாட்டுத் துறைமுகங்களில் இரண்டைத் தங்களுக்கென்று வைத்திருந் தார்கள். அவற்றின் பெயர் தொண்டி, மாந்தை என்பன. கொங்கு நாட்டுப்