156 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
நல்லியல்புகளையும் கூறியுள்ளார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அவ் வரசன் அவருக்கு ஒன்பது லட்சம் பொன்னையும் தன்னுடைய அரண் மனையையும் தன்னுடைய சிம்மாசனத்தையும் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். புலவர் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் அரசனுக்கு அமைச்சராக இருந்தார். இவைகளை எட்டாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பினால் அறிகிறோம். அக்குறிப்பாவது: “பாடிப் பெற்ற பரிசில் தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.” (கோயிலாள் - இராணி. கோயில் - அரண்மனை. காணம் - அக்காலத்தில் வழங்கின பொற்காசு. அரசு கட்டில் - சிம்மாசனம். அமைச்சு- மந்திரி பதவி) இது, புலவர் வேறு எவரும் அடையாத பெருஞ் சிறப்பாகும். அரிசில்கிழாரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. உம்பற்காட்டு இளங்கண்ணனார் உம்பற்காடு என்பது கொங்கு நாட்டு ஊர். இளங் கண்ணனார் என்பது இவருடைய பெயர். யானை மலைப்பிரதேசமாகிய உம்பற் காட்டில் வாழ்ந்தவராகையால் இப்பெயர் பெற்றார். இவர் பாடின செய்யுள் ஒன்று அகநானூற்றில் 264ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. ஒளவையார் ஒளவை (அவ்வை) என்பது உயர்குலத்துப் பெண் பாலார்க்கு வழங்கப்படுகிற பெயர். இது இவருக்குரிய இயற்பெயர் அன்று. உயர்வைக் குறிக்கும் சிறப்புப் பெயர். ஒளவையார் என்று சிறப்புப் பெயர் பெற்ற பெண்பாற் புலவர் சிலர் இருந்தனர். அவர்களில் இவர், காலத்தினால் முற்பட்டவர். கொங்கு நாட்டில் வாழ்ந்த இவர், கொங்கு நாட்டுத் தகடூரை யரசாண்ட அதிகமான் நெடுமானஞ்சியின் புலவராக இருந்தார். தகடூர், இப்போதைய சேலம் மாவட்டத்தினின்றும் பிரிந்து தர்மபுரி மாவட்டம் என்று பெயர் வழங்கப்படுகின்றது. ஒளவையார் முதன்முதலாக நெடுமானஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது அவன் பரிசு தராமல் காலந்தாழ்த்தினான். அப்போது இவர் ஓரு செய்யுளைப் பாடினார் (புறம். 206). பிறகு, அதிகமான் பரிசில் வழங்கி இவரை ஆதரித்தான். அதிகமான் அஞ்சியை ஒளவையார் |