பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு173

கூடலூர்கிழார், இவ்வரசன் இறந்த பிறகும் வாழ்ந்திருந்தார். இவ்வரசன். இறந்தபோது இவன்மேல் கையறுநிலை பாடினார் (புறம். 229). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” எள்று கூறுகிறது.

ஐங்குறுநூறுக்குப் பிற்காலத்திலே கடவுள் வாழ்த்துப் பாடியவர், பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தப் பெருந்தேவனாரே ஏனைய தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடினார். ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அந்த உரையாசிரியரின் பெயர் தெரியவில்லை.

இந்நூல் 1903ஆம் ஆண்டில் முதல்முதலாக அச்சுப் புத்தகமாக வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தாரும் திருமலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்களும் ஜே.எம். வேலுப்பிள்ளையவர்களும் ஆழ்வார் திருநகரி தே. இலக்குமணக் கவிராயர் அவர்களும் தங்களுடைய கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து இந்நூலைப் பதிப்பிக்க உதவி செய்தனர்.

இந்நூல் மருதத்திணை, வேட்கைப் பத்து, வேழப்பத்து, கள்வன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப்பத்து, தோழிகூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

நெய்தல்திணை, தாய்க்குரைத்த பத்து, தோழிக்குரைத்த பத்து, கிழவற்குரைத்த பத்து, பாணற்குரைத்த பத்து, ஞாழற் பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண் காக்கைப் பத்து, தொண்டிப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

குறிஞ்சித்திணை, அன்னாய் வாழிப் பத்து, அன்னாய்ப் பத்து, அம்மவாழிப்பத்து, தெய்யோப் பத்து, வெறிப்பத்து, குன்றக் குறவன் பத்து, கேழற் பத்து, குரக்குப் பத்து, கிள்ளைப் பத்து, மஞ்ஞைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

பாலைத்திணை, செலவழுங்குவித்த பத்து, செலவுப் பத்து, இடைச்சுரப்பத்து, தலைவியிரங்கு பத்து, இளவேனிற்பத்து, வரவுரைத்த பத்து, முன்னிலைப் பத்து, மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து, உடன்