| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 197 |
இரண்டாவது பிராமி எழுத்தின் படம் சிதைந்திருப்பதனால் அந்தப் படம் இங்குக் கொடுக்கப் படவில்லை. இந்த இரண்டு சாசனக் கல்வெட்டுகளும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. அமணன் யாற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சே(ர)லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகனிளங்கடுங்கோ இளங்கோ ஆக இருந்தபோது அறுத்த கல் என்பது இதன் பொருள். இடையில் எழுத்து மறைந்துபோன இரண்டாவது சாசனத்திலும் இதே செய்தி கூறப்படுகிறது. இரண்டு சாசனங்களின் கடைசிச் சொற்களில் மட்டும் சிறு வேறுபாடு காணப்படுகிறது. அது, முதல் சாசனத்தில் அறுத்த கல் என்றும், இரண்டாவது சாசனத்தில் அறுபித (அறுபித்த) கல் என்றும் காணப்படுகின்றன. இவ்விரண்டிலும் மூன்று அரசர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. கோ ஆதன் சே(ர)லிரும்பொறையும் அவன் மகனான பெருங் கடுங்கோனும் அவன் மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். பேரனான இளங்கடுங்கோன் இளவரசனாக இருந்தபோது அமண முனிவராகிய ஆற்றூர் செங்காயபன் என்பவர் (மலைக்குகையில்) வசிப்பதற்கு அறுத்துக் கொடுத்த கல் (மலைக்குகை) என்று இச்சாசனங்கள் கூறுகின்றன. சமண முனிவர்கள் மலைக்குகைகளில் வசித்துக் கற்பாறைகளில் படுத்து உறங்குவது அக்காலத்து வழக்கம் என்று அறிவோம். அரச பரம்பரையைச் சேர்ந்த இளங்கடுங்கோ மலைக்குகையின் கற்றரையைச் செம்மையாக அமைத்து முனிவருக்குத் தானமாகக் கொடுத்தான் என்பது இதன் கருத்து. இந்தச் சாசன எழுத்துக்களை ஐ. மகாதேவன் ஆராய்ந்திருக் கிறார்.17 டி.வி.மகாலிங்கம் ஆராய்ந்திருக்கிறார்.18 ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.19 முதல் வரியில் முதல் எழுத்தாக இருப்பது தி. இது தா என்று வாசிக்கும்படியும் இருக்கிறது. ஐ. மகாதேவன் இதை தா என்று படித்து இதற்கு முன்பு இ என்னும் எழுத்தை இட்டு இதா என்று வாசிக்கிறார். இதா என்று வாசித்து ‘இதோ’ என்று பொருள் கூறுகிறார். ஆனால், இங்குக் காணப்படுவது தி என்னும் ஒரு எழுத்துதான். இதன் பொருள் திரு என்பது. இந்தச் சாசனம் எழுதப்பட்ட சமகாலத்தில் வெளியிடப் |