214 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
மகேந்திரப்போத்தரசன், பகாப்பிடுகு, லளிதாங்குரன், குணபரன், மத்தவிலாசன், அவனிபாஜனன், சத்யசந்தன், புருஷோத்தமன், சத்துருமல்லன், சங்கீர்ணஜாதி, சித்ரகாரப்புலி, சேத்தகாரி, விசித்ர சித்தன், அலுப்தகாமன், கலகப்பிரியன், அபிமுகன், மகாமேகன், நரேந்திரன் முதலிய சிறப்புப்பெயர்களை இவன் கொண்டிருந்தான். 
1. மயேந்திரப் போத்தரெசரு 2. ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன் 3. ஸ்ரீ மஹேந்த்ர விக்கிரம இந்தப் படத்தில் முதலாவது, மகேந்திரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து. வல்லம் குகைக் கோயிலில் உள்ளது. ‘மயேந்திரப் போத்த ரெசரு’ என்பது இதன் வாசகசம். இரண்டாவது வடமொழி எழுத்து. ‘ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன்’ என்பது இதன் வாசகம். இது மகாபளி புரத்து வராகப்பெருமாள் குகைக் கோயிலில் உள்ளது. இது பிராகிருதப் பெயர் என்று தோன்றுகிறது. மூன்றாவது வடமொழி எழுத்து. இது பல்லா வரத்துக் குகைக் கோயிலிலும் திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலிலும், எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீ மஹேந்த்ர விக்ரம’ என்பது இதன் வாசகம். கீழேயுள்ளது மகnதிரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து; திருச்சிராப் பள்ளி குகைக்கோயிலில் உள்ளது. ‘பிணபிணக்கு’ என்பது இதன் வாசகம். பிணபிணக்கு என்பது இவன் சிறப்புப் பெயர்களில் ஒன்று. |