 பிணபிணக்கு சிவிபுந்து, நில்விலோனையம்பு, வேந்துலவித்து, பசரம்பு, சிலம்பு, மலாயு, கடுந்தரம்பு, நயம்பு முதலிய தெலுங்குப் பெயர்களையும் இவன் கொண்டிருந்தான். இப் பெயர்களை இவன் ஆந்திர நாட்டில் இளவரசனாக இருந்தபோது பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இவன் சிற்பக்கலை இசைக்கலை ஓவியக்கலை காவியக்கலை முதலிய கலைகளில் சிறந்தவன். குகைக் கோயில்களைத் தமிழ்நாட்டில் முதன் முதலாக அமைத்தவன் இவனே. இதனால் இவனுக்குச் சேதகாரி என்னும் பெயர் ஏற்பட்டது. இசைக்கலையின் நுட்பத்தை அறிந்தவனாதலால், இவனுக்குச் சங்கீர்ணஜாதி என்னும் பெயர் உண்டாயிற்று. ஓவியக்கலையில் தேர்ந்தவன் ஆனபடியினாலே இவனுக்குச் சித்திரகாரப்புலி என்னும் பெயர் உண்டாயிற்று. மத்த விலாசம் என்னும் நகைச்சுவை நாடக நூலை இயற்றிய படியினாலே இவனுக்கு மத்த விலாசன் என்னும் பெயர் ஏற்பட்டது. |