பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 249 |
வாதாபி நகரத்தை வென்ற நரசிம்மவர்மன் அந் நகரத்திலே வெற்றிக் கம்பம் ஒன்றை நாட்டினான். இந்த வெற்றிக் கம்பம் பிற்காலத் தில் உடைக்கப்பட்டது. இந்தக் கம்பத்தின் உடைபட்ட ஒரு பகுதி இன்றும் அந்நகரத்தில் காணப்படுகிறது. சிதைந்துபோன சாசன எழுத்துக் களும் இதில் காண்ப்படுகின்றன. இதில் “மாமாமல்லன்” “ஹிதி]பஜாங் கரேஸர பல்லவ” “(நர)சிம்மவிஷ்ணு” என்னும் சொற்கள் பல்லவக் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளான.1 நரசிம்மவர்மன் வாதாபி நகரத்தை வென்ற பிறகு, அந்நகரம் பதின்மூன்று ஆண்டுவரையில் அரசன் இல்லாமல் இருந்தது. இதற்குக் காரணம், புலிகேசியின் மக்கள் அரசுரிமைக்காகத் தம்முள் கலகஞ் செய்து போரிட்டுக் கொண்டதேயாகும். பிறகு கி. பி. 655-இல் புலிகேசி யின் பிள்ளைகளில் ஒருவனான விக்கிரமாதித்தியன் (முதலாவன்) சளுக்கிய நாட்டின் அரசனானான். இவன் அரசனானவுடன் சேனையைத் திரட்டிக்கொண்டு பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். இவன் கி. பி. 655-முதல் 381 வரையில் அரசாண்டான். ஆகவே, நரசிம்மவர்மனும் அவனுடைய மகனும் பேரனும் விக்கிரமாதித்திய னுடன் அடிக்கடி மகனும் பேரனும் விக்கிரமாதித்தியனுடன் அடிக்கடி போர்செய்ய நேரிட்டது. விக்கிரமாதித்தியன், நரசிம்மவர்மன் மீட்டுக் கொண்ட ஆந்திரப் பகுதி நாடுகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. மகாபலிபுரத்துத் திரி மூர்த்திக் குகைக் கோயிலில் மல்ல என்னும் பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனமும், திருக்கழுக்குன்றத்து ஒற்றைக்கல் மண்டபம் என்னும் குகைக் கோயிலிலே “வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர்” என்னும் தமிழ் எழுத்துச் சாசனமும் காணப்படுகின்றன. 
|