256 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
மாதித்தியன் நரசிம்மன்மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்று, புலிகேசி இழந்த நாடுகளை மீட்டுக்கொண்டதையும் கர்னூல் சாசனம் இவ்வாறு கூறுகிறது : “திருமகளுக்கும் மண்மகளுக்கும் மணாளனும், சிறந்த போர் வீரனாய் வடநாடு முழுவதையும் அரசாண்ட ஹர்ஷவர்த்தனனை வென்று பரமேசுவரன் என்று பெயர் படைத்தவனுமான பரமேசுவர சத்யாஸ்ரய மகாராசன் (புலிகேசி ) உடைய அருமை மகனான விக்கிர மாதித்திய சத்யாஸ்ரயன், மூன்று அரசர்களால் தன் தந்தையிடமிருந்து கைப்பற்றிக் கொள்ளப்பட்ட பூமியைத் தன்னுடைய சித்தகண்டம் என்னும் குதிரையின் உதவியினாலும் வாளாயுதத்தின் கூர்மை யினாலும் அனேக போர்களை வென்று கைப்பற்றினான்.” இவ்வாறு சாசனம் கூறுகிறபடியினாலே, நரசிம்மவர்மன் புலிகேசியிடமிருந்து கைப்பற்றிய ஆந்திரப் பகுதிகளைப் பிற்காலத்தில் விக்கிரமாதித்தியன் மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் என்பது தெரிகிறது.2 அன்றியும் தன் தந்தையைப் போலவே விக்கிரமாதித்தியனும், பல்லவ நாட்டின் மேல் பலமுறை படையெடுத்து வந்தான். ஆகவே, பல்லவ மன்னனாகிய நரசிம்மவர்மன் இவனுடன் போரிடவேண்டியதாயிற்று. புலிகேசி, சாளுக்கிய இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைத் தன் தம்பி யாகிய விஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவர்த்தனன் சுயேச்சையரசனானான். இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். ஆகவே, சளுக்கிய இராச்சியம், மேலைச்சளுடக்கிய இராச்சியம் என்றும், கீழைச்சளுக்கிய இராச்சியம் என்றும் இரு பிரிவாகப் பிரிந்தது. மேலைச்சளுக்கிய இராச்சியத்தை மேலே கூறிய படி இரண்டாம் புலிகேசியும் அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தி யனும் அரசாண்டார்கள். கீழைச்சளுக்கிய இராச்சியம் வடக்கே விசாகப்பட்டணம் ஜில்லா விலிருந்து தெற்கே வடபெண்ணையாறு வரையில் பரவியிருந்தது. இதனை யரசாண்ட விஷ்ணு வர்த்தனனுக்கு,குப்ஜ விஷ்ணுவர்த்தனன் மகரத்துவஜன், விஷமசித்தி, பிட்டரசன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் எப்போது காலமானான் என்று திட்டமாகக் கூறமுடிய வில்லை. விஷ்ணுவர்த்தனனுக்குப் பிறகு இவன் மகன் மகாராஜ ஜய சிம்மன் என்பவனும் அவனுக்குப் பிறகு அவன் தம்பி இந்திரவர்மனும் |